222
வஸந்தமல்லிகா
நெருப்பில் போட்டுக் கொளுத்திய குற்றத்துக்கு இவன் உத்தரை சொல்லிக் கொள்ளட்டும் - என்று கூறியவண்ணம் அவனது கையைப் பலமாகப் பிடித்துக் கொண்டார்.
பீம : திருட்டுக் குற்றம் நான் செய்தேன் என்று நீர் மாத்திரம் சொல்வது போதுமா. வேறு சாட்சி வேண்டாமா? சாஸனத்தைப் பார்த்தது யார்? அதை நான் எப்போது எடுத்தேன்? கொளுத்தப்பட்டது சாஸனந்தானா என்பது எப்படி நிச்சயம்? இவைகளுக்கெல்லாம் சாட்சியிருந்தால் என்னைத் தொடும் - என்று பரிகாசமாகப் பேசினான்.
மோக : (கோபத்தோடு) அடே அயோக்கிய நாயே! சட்டமா பேசுகிறாய்?
பீம : வார்த்தைகளை அதிகமாகப் பேசினால் ஒவ்வொன்றுக்கும் பதில் கிடைக்கும். சாட்சியிருந்தால் போலீசார் வஸம் ஒப்புவிக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் போக வேண்டும்.
ஸகா : (உள்ளூர சந்தோஷமடைந்து ) பீமனுடைய சாமர்த்தியம் யாருக்கு வரும்! அவன் எல்லோரையும் ஏமாற்றி விடுவானே!
தம : (பரிகாஸமாக) இவருடைய சாமர்த்தியம் ஒருவருக்கும் வராது. இவருடைய தாயார் திருட்டுத்தனமாகக் குழந்தையைப் பெற்று, ஒருவரும் அறியாதபடி அதைக் குப்பைத் தொட்டியில் போட்டுத் தப்பித்துக் கொண்டாளே. அவள் எவ்வளவு சாமர்த்தியசாலி. அவளுடைய பிள்ளையாகிய இவர் அவளைக் காட்டிலும் அதிக சாமர்த்தியசாலியாக இருக்க மாட்டாரா! அதைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.
மல்லி : போதும்; விட்டுவிடுங்கள்; போகட்டும். எனக்காக தயவு செய்யுங்கள்.
மோக : அடே! நீ எவளை வஞ்சித்தாயோ அவளே உன் விஷயத்தில் இவ்வளவு பரிதாபப்பட்டு பரிந்து பேசுகிறாள். ஆகையால், இதோ உன்னை விட்டு விட்டேன், போ, உன் எலும்பும் தோலும் பத்திரமாய் இருக்க வேண்டுமானால் நீ என் கண்ணில் படாதே! என்று அவனது கையை விட்டு விட்டார்.
பீம : இந்த அதட்டலையெல்லாம் நான் அறிவேன். கடையைக் கட்டும். உம்முடைய உடம்பை முதலில் காப்பாற்றிக்