224
வஸந்தமல்லிகா
சொல்கிறேன். அது சரிதானா என்று கவனியும். இவருடைய ஜெமீனை அபகரிக்கும் பொருட்டு, இவரைச் சூதாட்டத்துக்கு இழுத்து தினந்தினம் பெருத்த பொருளை அபகரித்தீர். வஸந்தராவை ஏமாற்றி அவருடைய சமஸ்தானத்தை அபகரிக்கும் பொருட்டு மரண சாஸனத்தைத் தேட முயன்றீர்; பிறகு மல்லிகாவை இன்னாளென்று அறிந்து கொண்டீர்; அவளைக் கலியாணம் செய்து கொண்டால், ஜெமீந்தார் ஆகிவிடலாம் என்று நினைத்தீர். வேறு எவளோ இறக்க அவளை மல்லிகா என்று சொல்லி, ஸகாராம் ராவை வஞ்சித்தீர். கலியாணபுரம் ஜெமீந்தார் படத்தின் பின்புறத்தில் இருந்து எடுத்து வைத்திருந்த சாஸனத்தைத் திருட்டுத்தனமாக அபகரித்துக் கொண்டு, ஒன்றையும் அறியாதவரைப்போல நடித்து, அது வெந்நீரடுப்பில் எரிந்து போய் விட்டதென்று சொல்லி, அவரை ஏமாற்றினீர். இவ்ளவவு சாமார்த்தியந்தான்! ஆனால், இப்போது இந்தப் பெண்ணை கலியாணஞ் செய்து கொண்டு ஜெமீனை அபகரிக்கும் சமயத்தில், முட்டாளாகிய நான் இவ்வளவையும் கண்டுபிடித்து, இங்கே வந்தபோது சாஸனத்தையும் எங்களுக்கெதிரிலேயே கொளுத்தி விட்டீர். மல்லிகாவின் வாயில் மண் போட்டு விட்டதாக நினைத்துச் சந்தோஷப்படுகிறீர்; எல்லாரையும் ஏமாற்றி விட்டதாக நினைத்து எங்களை ஏளனம் செய்கிறீர்.
பீம : நீ இப்போது என்ன புதிய சங்கதியைச் சொல்லி விட்டாய்? முன்னம் தனித்தனியாக சொன்னதை எல்லாம் இப்போது ஒன்றாய்ச் சேர்த்துச் சொல்கிறாய். அவ்வளவுதானே?
தம : அவ்வளவுதான். ஆனால் நீர் கொளுத்தியது மாத்திரம் மரண சாஸனமல்ல. அது ஒன்றுதான் புதிய சங்கதி.
பீம : (திடுக்கிட்டு) உனக்கென்ன பைத்தியமா? நான் எத்தனையோ தடவைகளில் படித்துப் பார்த்துப் பார்த்து மடியில் வைத்திருந்தேனே! அது ஸாசனமல்ல என்று உன்னிடம் யார் சொன்னது. கீழே விழுந்தவன் சிரிப்பதைப்போல, இதுவும் ஒரு சாமர்த்தியமோ?
தம : (தனது மடியிலிருந்த ஒரு காகித மடிப்பை எடுத்துக் காட்டி) பிரகஸ்பதி! இதோ பார்த்தீரா ஸாசனத்தை? இதைத்தான் நீர் திருடி வைத்திருந்தீர். கொளுத்தப்பட்டது வெற்றுக் காகிதம்.