பக்கம்:வசந்த மல்லிகா.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

வஸந்தமல்லிகா

மகா பாதகன். நல்ல வேளையாக அவனுடைய வலையில் விழாமல் தப்பினோமே!

மல்லி : நான் தப்பியது உங்களுடைய தயவினாலன்றி வேறல்ல. இந்தப் பேருதவிக்கு அருகமாக நான் இனி உங்களிடம் எப்படி நடந்து கொள்ளப் போகிறேன்.

தம : (புன்னகையோடு ) நீ எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை என்கிறாயே! நான் அதைத் தெரிவித்தால் அப்படி நடந்து கொள்ளுவாயா?

மல்லி : தடையில்லை . பேருபகாரியாகிய நீங்கள் எனக்கு நன்மையையல்லாது தீமையை ஒருநாளும் கோர மாட்டீர்கள்.

தம : சரி; அப்படியானால், உன்னுடைய விஷயங்களை யெல்லாம் இன்னம் சொற்பகாலத்துக்கு என் வசத்திலும் மோகனராவ் வசத்திலும் விட்டு விட வேண்டும். நாங்கள் சொல்லுகிறபடி நீ செய்ய வேண்டும். செய்கிறாயா?

மல்லி : அப்படியே செய்கிறேன். நீங்கள் என்னைக் கிணற்றில் விழச் சொன்னாலும் விழத் தடையில்லை.

தம : (புன்சிரிப்போடு) கடைசியாகச் சொன்ன காரியம் மாத்திரம் யார் சொன்னாலும் செய்ய வேண்டாம்; மற்றதை நாங்கள் சொல்லுகிறபடி செய்தால் அதுவே போதும். சரி; திரும்பவும் அதி சீக்கிரம் உன்னைப் பார்க்கிறோம். அதுவரையில் இவ்விடத்திலேயே ஜாக்கிரதையாக இரு!

மல்லி : சரி; அப்படியே ஆகட்டும்; என் விஷயத்தில் நீங்கள் இவ்வளவு அபிமானம் வைத்திருப்பதைக் காண, எனக்கு உண்டாகும் சந்தோஷத்தை எப்படி வெளியிடுவேன். ஈசுவரன் உங்களுக்கும் சீக்கிரத்தில் சுகத்தைக் கொடுப்பான்; சந்தேகமில்லை.

தம : (அசட்டையாக) இனி எனக்கென்ன சுகம் உண்டாகப் போகிறது?

மல்லி : பவானியம்மாள்புரத்தின் இப்போதைய ஜெமீந்தாரை நீங்கள் சீக்கிரம் கலியாணம் செய்து கொண்டு க்ஷேமமாக வாழ வேண்டும். அதற்கு ஈசுவரன் அவசியம் சகாயம் செய்வார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/248&oldid=1234044" இலிருந்து மீள்விக்கப்பட்டது