பக்கம்:வசந்த மல்லிகா.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூட்டி வைக்கும் தரகர்

231

தம : நீதானே இப்போதைய ஜெமீந்தார். உனக்குச் சீக்கிரம் கலியாணம் செய்து வைக்க வேண்டும் என்கிறாயா? அப்படியே ஆகட்டும்; சீக்கிரத்தில் முடித்து வைக்கிறோம். கவலைப்படாதே!

மல்லி : (சிரித்துக்கொண்டு) எனக்கா சொன்னேன்? நான் இன்னும் ஜெமீனை ஒப்புக் கொள்ளவில்லையே; இப்போதிருப்பவரைப் பற்றியல்லவா நான் சொன்னது.

தம : ஆம்; உண்மைதான். அதைத்தான் நானும் சொல்லுகிறேன்; அவரைக் கலியாணம் செய்து கொண்டால் சுகமாய் இருக்கலாம் என்றுதான் நானும் நினைக்கிறேன் - என்று சொல்லிய பிறகு அவளும் மோகனராவும் விடைபெற்றுக் கொண்டு, வெளியில் போயினர். மல்லிகாவும் கிருஷ்ணவேணியும் தனியாக இருந்தனர். மல்லிகா சோர்வடைந்து அங்கிருந்த ஒரு கட்டிலின் மேல் உட்கார்ந்து சாய்ந்து கொண்டாள். கிருஷ்ணவேணி அவளுக்கு அருகில் போய் நின்று கொண்டு, புன்னகை செய்து, "கடைசியாக நீ பெருத்த சீமாட்டி ஆகிவிட்டாய். ஆரம்பத்திலிருந்தே நான் சொல்லிக் கொண்டு வந்தது நிஜமாய் விட்டது பார்த்தாயா? போட்டும். எப்படியாவது நீ பெருமை அடைந்தாயே; அதுவே எனக்குப் பரம் ஆநந்தமாக இருக்கிறது" என்று அன்போடு கூற , அவளது கண்களில் நீர் தாரை தாரையாக ஒழுகியது. உதடுகள் துடித்தன.

மல்லி : கிருஷ்ணவேணி! நீ சந்தோஷப்படுவதாகத் தெரியவில்லையே! வருத்தப்படுவதைப் போலல்லவா இருக்கிறது. ஏன் இதற்குள் என்னைப் பற்றி இவ்வளவு கெடுதலாக எண்ணி விட்டாய்?

கிரு : (அதிக விசனத்துடன்) கெடுதலாக ஒன்றும் நினைக்கவில்லை; நீங்கள் -

மல்லி : அடாடா! இது என்ன பெருத்த அதிசயமாய் இருக்கிறதே! என்னை இப்போதே நீங்கள் என்று அழைக்க ஆரம்பித்து விட்டாயே! ஐசுவரியம் வந்து விட்டதனாலேயே உனக்கும் எனக்கும் உள்ள அன்பும் சிநேகமும் மாறுமா? இது வரையில் நாம் ஒருவருக்கொருவர் பாராட்டிய அன்னியோன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/249&oldid=1234045" இலிருந்து மீள்விக்கப்பட்டது