பக்கம்:வசந்த மல்லிகா.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

வஸந்தமல்லிகா

எழுதிய ஸகாராமுக்குத்தான் பைத்தியம் பிடித்திருக்குமா? ஒன்றும் தெரியவில்லை !" என்றான்.

கமலா : என்ன வேடிக்கை! ஆற்றில் விழுந்து செத்தவள் எப்படிப் பிழைத்திருப்பாள்?

ஸீதா : (ஆத்திரத்தோடு) இது எனக்கு முன்னமேயே தெரியாமல் போய்விட்டதே! தெரிந்திருந்தால் அவள் பிழைக்காதபடி அவளுடைய தலையில் ஒரு பெரிய கல்லைப் போட்டிருப்பேனே!

கமலா : இது நிஜமாயிருக்குமா? அல்லது, வேறு எவளாவது இவளென்று வேஷம் போடுகிறாளா?

ஸீதா : ஓர் ஆளைப் பிடித்துக் கொண்டு ஓடிய கழுதையைப் பற்றி நமக்கென்ன பேச்சு? வெட்கம் மானம் ஏதாவது இருந்தால், அவள் ஒரு மனுஷி என்று மறுபடியும் வெளியில் வருவாளா?

கமலா : ஆமாம்; துஷ்ட முண்டை ! இனிமேல் நாம் அவளுடைய முகத்தில் கூட விழிக்கக் கூடாது.

ஸீதா : அவள் ஓடிப்போனதைப் பற்றி ஊரெல்லாம் சிரிக்கிறதே! இனி இங்கே தலைகாட்ட அவளுக்குப் பைத்தியமா? அவள் வரமாட்டாள்.

துக்கோ : அப்படியா நினைக்கிறாய்? நாளைக்கு மறுநாள் அவள் இங்கே வரப்போகிறாளாமே! அதுதான் எனக்குப் பெருத்த கவலையாக இருக்கிறது. அவள் வந்து விட்டால், அவளுடைய வருமானத்தை நாம் அவளிடம் கொடுக்க வேண்டுமே!

கமலா : ஒரு காரியம் செய்வோம்; அவள் இங்கே வருமுன் ஸகாராமுக்கு ஒரு கடிதம் எழுதி விடலாம். மல்லிகா உயிரோடு இருப்பதைப் பற்றி நாம் சந்தோஷப்படுவதாயும், ஆனால் அவளுடைய துர்நடத்தையை உத்தேசித்து அவளை இந்த வீட்டில் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்றும் உடனே கடிதம் எழுதி அனுப்பி விட்டால் சரியாய்ப் போகிறது.

துக்கோ : (ஆத்திரத்தோடு ) என்ன துன்பமோ! வருகிற இழவெல்லாம் எனக்கே வருகிறது. இந்தப் பீடை ஒழிந்தபின் நமக்குச் சௌக்கியமாயிருந்தது. மறுபடியும் வரப்போகிறது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/258&oldid=1234104" இலிருந்து மீள்விக்கப்பட்டது