உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சக்கிலியர் சாமிக்கு செருப்புப் பூசை

241

என்று வாயில் வந்தபடி மல்லிகாவைப் பலவாறு தூஷித்த வண்ணம் கமலா சொல்லியவாறு ஒரு கடிதம் எழுதி அப்போதே ஸகாராம் ராவுக்கு அனுப்பி விட்டான். அதை ஸகாராம் உடனே தமயந்தியிடம் சேர்த்தான்.

மறுநாள் ஸகாராம் ராவ் பவானியம்மாள்புரத்திற்கு வந்து, நீடித்த காலமாக அடைபட்டுக் கிடந்த பங்களாவைத் திறந்து, பல ஆட்களை விடுத்து அதைச் சுத்தி செய்து கலியாண வீட்டைப் போல நேர்த்தியாக அலங்கரித்து வைத்தான். அந்த ஏற்பாடுகளைக் கண்ட அவ்வூர் ஜனங்கள் அதன் காரணத்தை அறிந்து கொள்ளக் கூடாதவர்களாய், "யார் வரப் போகிறார்கள்? ஏன் பங்களாவைச் சுத்தம் செய்கிறார்கள்?" என்று ஒருவரை ஒருவர் வினாவி வியப்போடு பேசிக் கொண்டிருந்தார்கள்.

வஸந்தராவ் கலியாணம் செய்து கொண்டு பங்களாவுக்கு வரப் போகிறார் என்று இரகசியமாகக் கூறினர். அவர் ஜெமீனை வேறொருவருக்கு விற்று விட்டதாகவும், வாங்கியவர் வரப் போவதாகவும் வேறு பலர் ஊகித்தனர். இங்ஙனம் நிலைமை இப்படியிருக்க, தஞ்சையில் தமயந்தி மல்லிகாவினிடம் போய், "மல்லிகா! நாம் நாளைக்கு ஊருக்குப் போக வேண்டும். நாளை காலை ஆறு மணிக்குப் புறப்பட நீ தயாராக இருக்க வேண்டும்" என்றாள்.

மல்லி : (ஆச்சரியத்தோடு) எந்த ஊருக்கு?

தம : பவானியம்மாள்புரத்துக்கு . ஏன் அந்தப் பெயரைச் சொன்னவுடன் உன் முகம் மாறிவிட்டது? உன்னுடைய பங்களா முதலிய வைபவங்களை நீ பார்க்க வேண்டாமா?

மல்லி : இவ்வளவு சீக்கிரத்திலா? இப்போதுதான் அவைகளுக்கு ஓர் எஜமான் இருக்கிறாரே! என்ன அவசரம்?

தம : யார் வஸந்தராயரா?

மல்லி : ஆம்.

தம : அவர் உன்னுடைய சொத்துக்களை எல்லாம் நாளைய தினம் சாயங்காலம் உன்னிடம் ஒப்புவிக்கும் பொருட்டு அங்கே வரப்போகிறார்.

வ.ம. - 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/259&oldid=1234105" இலிருந்து மீள்விக்கப்பட்டது