பக்கம்:வசந்த மல்லிகா.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இறந்தவர் பிழைத்தது எங்ஙனம் சொல்வது!

251

அதைக்கேட்ட வஸந்தராவ், "அதனால் எனக்கு விசனமே இல்லை . நீர் புதிய எஜமானியிடத்தில் நல்ல மாதிரியாக நடந்து நற்பெயரெடுக்க வேண்டும்; அதுதான் நான் உமக்குச் சொல்லக் கூடியது" என்றார்.

அந்தச் சமயத்தில் மோகனராவ் அங்கு வந்து, “இன்று இராப் போஜனம் ஆன பிறகே ஸஞ்சலாக்ஷி தங்களைப் பார்க்க முடியுமாம். ஆகையால், தாங்கள் சிறிது நேரம் தோட்டத்தில் உலாவினால், தங்களுடைய விசனத்துக்கு அது ஓர் ஆறுதலாயிருக்கும்" என்றார்.

வஸ : தாங்கள் உலாவ வரவில்லையா?

மோக : நான் அவசரமான சில கடிதங்கள் எழுத வேண்டும்; அதனால் வரக்கூடவில்லை. மன்னிக்க வேண்டும் - என்றார்.

வஸந்தராவ் அதற்கிணங்க, மோகனராவ் தமது விடுதிக்குப் போய்விட்டார். ஸகாராம்ராவும் ஏதோ காரியமாக வெளியில் போய் விட்டான். அதன் பிறகு வஸந்தராவ் எழுந்து சமுத்திரக் கரையை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தார். அவர் படித்துறையை அடைந்தவுடன், அவரது மனதில் மல்லிகாவின் நினைவும், உருவமும் தோன்றி அகலாமல் வதைக்க ஆரம்பித்தன. அந்த இடத்தில் அவள் தம்மோடு கிள்ளைப்போல் கொஞ்சிப் பேசிய மொழிகளும் அவளது உல்லாஸமும் அவள் இறந்த பிறகு எல்லாம் ஒடுங்கிக் கிடந்த பரிதாபகரமான நிலைமையும் மின்னல் தோன்றுவதைப் போல அவரது மனதில் தோன்றின. "அடி என் ஆசைக் கிளியே! என் ஆருயிர்க் கோமளாங்கி! இந்த உலகில் எனக்கு இனி யாதொரு கதியும் இல்லாவிட்டாலும் இனி அடுத்த ஜென்மத்திலாவது, நான் உன்னைச் சந்திப்பேன் என்கிற ஒரு நம்பிக்கை மாத்திரம் உண்டாகிறது. இனி நான் நீண்ட காலம் உலகத்தில் இருப்பது துர்லபம். கண்மணி! கவலைப்படாதே; சீக்கிரமாக உன்னிடம் வந்து சேர்கிறேன்" என்று தனக்குத்தானே மொழிந்து கொண்டு பலவாறு சிந்தனை செய்தவண்ணம் விசனக் கடலில் மூழ்கி மெய்ம் மறந்தவராய்ப் படித்துறையின் மேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/269&oldid=1234401" இலிருந்து மீள்விக்கப்பட்டது