பக்கம்:வசந்த மல்லிகா.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

வஸந்தமல்லிகா

அப்போது மல்லிகா, "ஆகா குளிர்ந்த காற்று எவ்வளவு மனோ ரம்மியமாக வீசி மனதையும், தேகத்தையும் பரவசப் படுத்துகிறது. இதைத்தவிர சுவர்க்க லோகம் வேறு எங்கே இருக் கிறது! எப்போதும் என்னோடு இந்த மந்தமாருதமும், தாங்களும் இருந்து விட்டால், நான் ஆகாரம் நித்திரை முதலிய வேறு எந்தச் சுகத்தையும் கொஞ்சங்கூட நினைக்கவே மாட்டேன்" என்றாள்.

வஸந்தராவ் : (உடனே) அடீ இன்பவல்லி! என் மனதில் கோவில் கொண்ட என் குல தெய்வமே! கோகிலத்வனியைப் பழிக்கும் குரலால் நீ பேசும் சொற்களின் இனிமையான ஓசையைக் கேட்டுக் கொண்டே இருந்தால், எனக்கு அதுவே பரமசுகம். இந்த உலகில் அதைத் தவிர எனக்கு வேறு புருஷார்த்தம் இருக் காது என்பது உறுதி. மற்றவைகள் எல்லாம் எனக்கு இன்பகர மாகவே தோன்றவில்லை - என்றார்.

மல்லி : ஆனால் இந்தக் கடற்காற்று நமக்கு ஒரு வாரத்துக்கு இல்லாமல் போய்விடுமே என்பதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. நாம் ஊருக்கு எப்போது புறப்படுகிறது?

வஸ : நாளை ராத்திரி ரயிலில் புறப்பட வேண்டும். நாளைக்கு மறுநாள் காலையில் முகூர்த்தமாம். நல்ல வேளையாக இரண்டு முகூர்த்தங்களும் ஒரே காலத்தில் நடக்கின்றன. ஆகையால், நாம் இரண்டு தடவைகள் போக வேண்டிய அவசியமில்லாமல் போனது ஒரு லாபமல்லவா?

மல்லி : மோகனராவின் இளைய ஸகோதரரான ஸுந்தர ராவை நீங்கள் இதற்குமுன் பார்த்தீர்களா?

வஸ : பார்த்திருக்கிறேன். அவன் நல்ல அழகான பையன். கிருஷ்ணவேணிக்கு அவன் சரியான புருஷன்தான்.

மல்லி : (புன்சிரிப்போடு) ஏன்? தமயந்திக்கும் மோனகராவுக்கும் பொருத்தமில்லையா? மணத்திற்கு முன்பாகவே அவர்களிருவருடைய மனமும் குணமும் ஒத்துப் போய்விட்டன. இரண்டும் சரியான ஜோடிகள் என்பதற்கு ஆக்ஷேபணையில்லை. நாம் கலியாணத்திற்குப் போகாவிட்டால், முகூர்த்தத்தை நிறுத்தி விடுவதாக எழுதியிருக்கிற படியால், வண்டி தவறாமல் சரியான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/278&oldid=1234420" இலிருந்து மீள்விக்கப்பட்டது