உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

வஸந்தமல்லிகா

சொத்துக்களையெல்லாம் ஒப்புக்கொண்டாராம். அவர் இன்று காலையில், நம்முடைய ஊரிலுள்ள பங்களாவைப் பார்க்க வேண்டும் என்று வந்திருக்கிறார். அவர் யார் தெரியுமா உனக்கு? நாம் பூனாவில் இருந்தபோது வந்து உன்னோடு விளையாடிக் கொண்டிருப்பாரே அவர்தான்.

கமலா : ஒகோ அப்படியா அவரைப்பற்றி எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறதே!

துக்கோ : இன்று நான் அவரைப் பார்த்தேன். அவர் என்னைக் கண்டு மிகவும் சந்தோஷமடைந்தார்; இங்கே இன்னும் சில நாட்களிருந்து ஊர்களை எல்லாம் சுற்றிப் பார்க்கப் போகிறாராம். நாம் மூவரும் இனி அடிக்கடி பங்களாவுக்கு வரவேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார்.

கமலா : அப்படியா நிரம்ப சந்தோஷம். இதற்கு முன்னிருந்த ஜெமீந்தார் நம்மை மதித்துப் பேசியதுகூடக் கிடையாது! என்ன நமது பாக்கியம்! அப்படியானால் நாம் பண்டிகையன்று பங்களாவுக்குப் போக வேண்டும்.

ஸீதா : அப்பா! அவருக்கு மனைவி குழந்தைகள் இருக்கிறார்களா? அவர்கள் எப்போது வருவார்கள்?

துக்கோ : அவர் மிகவும் பாலியரல்லவா. அவருக்கு இன்னம் கலியாணமே ஆகவில்லையே. இனிமேலேதான் அவர் மனதுக்குப் பிடித்த ஒரு பெண்ணைப் பார்த்துக் கலியாணம் செய்துகொள்வார். ஆனால், அவர் இந்தத் தேசத்திலிருப்பாரோ, பூனாவுக்கே போய்விடுவாரோ தெரியவில்லை. நாம் அவரிடம் அடிக்கடிப்போய் நட்புண்டாக்கிக் கொண்டால், அதனால் பல செளகரியம் ஏற்படும். இதுவும் நம்முடைய அதிர்ஷ்ட காலந்தான். அதிருக்கட்டும்; உங்களுக்கெல்லாம் உடைகள் தைத்துக் கொள்ளுகிறீர்களே, மல்லிகாவுக்கு ஏதாவது கொடுத்தீர்களா?

கமலா : அவளுக்கென்ன அவசரம்? எங்களுக்குத்தான் நல்ல உடைகளில்லை. அவள் ஜதை ஜதையாகப் பாவாடையும் தாவணியும் வைத்துக் கொண்டிருக்கிறாளே! இப்போது புது ஜெமீந்தார் வந்திருக்கிறார். அவரைப் பார்க்க நாம் பங்களாவுக்குப் போகும்போது நல்ல உடைகளில்லாவிட்டால் அவர் நம்மைக் கேவலம் அற்ப மனிதராக மதிப்பார். அடுப்பண்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/28&oldid=1229157" இலிருந்து மீள்விக்கப்பட்டது