உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பேய்களும் பெண்மானும்

11

யிலிருப்பவளுக்கு இப்போதிருக்கும் துணி போதாதோ? பின்னால் வேண்டுமானால் பார்த்துக் கொள்வோமே.

ஸீதா : அவள்தான் சிவப்பாகவும் அழகாகவும் இருக்கிறாளே! அவளுக்குப் புதிய உடைகள் எதற்காக? நாங்கள் இரண்டு பேரும் கட்டிக் கழிக்கும் பழைய பாவாடையைக் கட்டிக் கொண்டாலும் அது ஏராளமாய்ப் போய்விடுமே. அதைப்பற்றிக் கவலை எதற்கு?

துக்கோ : சே! அப்படிச் சொல்லாதே; அவளும் உங்களைப் போலக் குழந்தைதானே. அவளுக்கும் ஏதாவது ஒன்று கொடுங்கள் - என்றான்.

அங்கே நடந்த சம்பாஷணையையெல்லாம் அடுத்து அறையிலிருந்த வண்ணம் கவனித்திருந்த மல்லிகா மெதுவாகக் கூடத்திற்கு வந்தாள். அவளைக் கண்ட துக்கோஜிராவ் புன்சிரிப்போடு, "மல்லிகா தீபாவளிக்கு உனக்கு என்ன வேண்டும்?" என்றான். அதைக்கேட்ட மல்லிகா சிறிது நாணமடைந்து குனிந்த தலையோடு "எனக்கு வேறொன்றும் வேண்டாம். கமலாவுக்கு தைக்கிற வெல்வெட்டு ரவிக்கைபோல ஒன்று வேண்டும். உங்களிடத்தில பணமில்லாவிட்டால், எனக்கு வட்டிப்பணம் கொடுக்க வேண்டியவர்களைக் கேட்டால், உடனே கொடுப்பார்கள்" என்று தணிந்த குரலில் மறுமொழி கூறினாள்.

துக்கோ : அம்மா! மல்லிகா! உனக்குச் செய்ய வேண்டுமென்பது எனக்குத் தெரியாதா? வட்டிப்பணம் கொடுக்க வேண்டியவர்களைக் காலையிற் கண்டு கேட்டேன்; இன்னம் இரண்டு மூன்று நாட்கள் ஆகவேண்டுமென்று சொல்லிவிட்டார்கள். நான் என்ன செய்வேன்? என் கையில் ஒரு செப்புக்காசுமில்லை. கொஞ்சம் பொறுத்துக்கொள். பணம் வந்தவுடனே உன் ஆசையைப் பூர்த்தி செய்கிறேன் - என்றான். "அப்படியே ஆகட்டும்"மென்று சொல்லிவிட்டு மல்லிகா வீட்டுக் காரியங்களைச் செய்யும் பொருட்டு உள்ளே சென்றாள்.

சிறிது நேரத்திற்கு முன் துக்கோஜிராவ் தனது பெண்களிடம் தயாள குணத்துடன் கொடுத்த 5 ரூபாயும் அன்று காலையில் வசூல் செய்யப்பட்ட மல்லிகாவின் வட்டிப் பணமே. அதை அவளிடம் சொல்லாமல் மறைத்து அவளை ஏமாற்றினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/29&oldid=1229160" இலிருந்து மீள்விக்கப்பட்டது