உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

வஸந்தமல்லிகா

ஸகா : யார் மேல் சந்தேகம்?

ஜெமீந் : ஒருவர்மேலுமில்லை. இறந்துபோன ஜெமீந்தார் ஆறு மாசத்துக்கு முன்னர் எனக்கொரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் இந்த சமஸ்தானமும் சொத்துக்களும் என்னைச் சேராவென்றெழுதியிருக்கிறார். இதோ பார்த்தீரா அந்தக் கடிதத்தை? - என்று தமது சட்டைப் பையிலிருந்த ஒரு கடிதத்தை எடுத்து சர்வாதிகாரியிடம் கொடுத்தார்.

உடனே அவன் உள்ளே சென்று அங்கிருந்த மெழுகுவர்த்தி விளக்கொன்றை எடுத்து வந்து படியின்மேல் வைத்துவிட்டு கடிதத்தை அடியில் வருமாறு படித்தான் :-

"சிரஞ்சீவி வஸந்தராவுக்கு ஆசீர்வாதம். நான் சென்ற ஒரு மாசகாலமாய்ப் படுத்த படுக்கையாகக் கிடக்கிறேன். வைத்தியர்கள் என்னை முற்றிலும் கைவிட்டு விட்டார்கள். ஆகையால், நாமிருவரும் இனிமேல் சந்திப்போமென்பது சந்தேகம். எனக்குப் பிறகு, என்னுடைய ஏராளமான சொத்துக்களை எல்லாம் பெறலாமென்று நீ நினைத்துக் கொண்டிருக்கலாம். நீ என்னைக் கடைசியாகப் பார்த்தபோதும், நான் உனக்கு உதவி செய்வதாய் வாக்களித்தேன். உண்மையை நான் அப்போது உனக்குத் தெரிவிக்கக்கூடவில்லை. எப்போதும் நியாயத்திற்குப் பழுது ஏற்படக் கூடாதாகையால், சொத்துக்களையும் ஜெமீனையும் உண்மையில் யார் பாத்தியஸ்தரோ அவருக்கு எழுதி வைத்துவிட்டேன். நீ எப்போதும் ஏழ்மை நிலைமையிலிருந்து அதைத் தாங்கினவனாகையால், இதைப் பற்றி நீ அதிகமாக வருந்தமாட்டாயென்று நினைக்கிறேன். ஆனால், உன்னுடைய கடன்களைத் தீர்ப்பதற்கும் உனது ஜீவனத்திற்கும் தேவையான பொருளை உனக்கு எழுதி வைத்திருக்கிறேன். உனக்கு சலக நன்மையும் உணடாவதாக.

பரசுராம பாவா

என்று படித்து முடித்தான். இரண்டொரு நிமிஷ நேரம் இருவரும் மெளனமாயிருந்தனர். பின், ஸகாராமராவ், "இது நிரம்பவும் ஆச்சரியமாக இருக்கிறது. இதன்படி இன்னொரு சாஸனம் எழுதப்பட்டிருக்க வேண்டுமென ஏற்படுகிறது" என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/36&oldid=1229193" இலிருந்து மீள்விக்கப்பட்டது