20
வஸந்தமல்லிகா
"யார் அது கொஞ்சம் நில்!” என்றார். அதைக் கேட்ட மடந்தை திடுக்கிட்டுத் திகைத்து எந்த வழியாக ஓடிப்போகலாமென்னும் நினைவோடு நாற்புறங்களிலும் திரும்பிப் பார்த்தாள். அதற்குள் அவர் சமீபத்தில் வந்து சேர்ந்தார். அவள் அச்சமடைந்து நாணிக் குனிந்து அப்படியே நின்றாள்.
"நாங்கள் திடீரென்று வந்ததனால் பயந்துவிட்டாய் போலிருக்கிறது. பயப்படாதே" என்று அன்புடன் அவளை நோக்கிய வண்ணம் கூறிய ஜெமீந்தார்; அவளது பேரழகையும் யெளவனத்தையும் கண்டு திகைப்படைந்தார்.
மல்லி : இல்லை, இல்லை - என்று கூறியவண்ணம் மெல்ல நடக்க ஆரம்பித்தாள்.
ஜெமீந் : ஏனம்மா! இந்த பங்களாவின் காவற்காரன் எவ்விடத்தில் குடியிருக்கிறான் தெரியுமா?
மல்லி : அதோ தோட்டத்திற்கு வெளியிலிருக்கிற வீட்டிலிருக்கிறான் - என்று தன் கையால் சுட்டிக் காட்டினாள்.
ஜெமீந் : நீ அவனுக்கு ஏதாவது சொந்தமாயிருக்குமோ?
மல்லி : இல்லை, இல்லை - என்றாள்.
அவளது சுந்தர வதனத்தைப் பார்க்கப் பார்க்க அவளிடத்தில் அவருக்கு ஒருவித அன்பும் அபிமானமும் உண்டாயின.
ஜெமீந் : அப்படியானால் நான் கேட்டது என்மேல் தவறு; இரவில் அகாலத்தில் நீ இங்குத் தனிமையிலிருந்தபடியால், அப்படியிருக்குமோவென்று நினைத்துக் கேட்டேன். மனதில் வருத்தம் வைத்துக் கொள்ளாதே!
மல்லி : இல்லை, இல்லை. அப்படித் தாங்கள் என்ன கேட்டு விட்டீர்கள்? எங்களுடைய வீடு சமீபத்திலிருக்கிறது. இந்தச் சோலையில் எப்போதும் ஒருவரும் இருக்கிறதில்லை. ஆகையால், நான் அடிக்கடி நிலவில் வேடிக்கையாக இங்கே வந்து சற்றுநேரமிருந்து போவது வழக்கம். இன்றும் எவரும் இருக்கமாட்டார்களென்று நினைத்து வந்துவிட்டேன்.
ஜெமீந் : அப்படியானால் ஒருநாளுமில்லாமல் இன்று நான் இங்கே வந்ததற்கு சமாதானம் சொல்ல நானே கடமைப்-