பக்கம்:வசந்த மல்லிகா.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வேடன்வலைப் பேடன்னம்

21

பட்டவன் ஆகிவிட்டேன். என்னுடைய பெயர் வஸந்த ராவ். இந்த ஜெமீனும் இதன் சொத்துக்களும் சமீபத்தில் எனக்குச் சொந்தமாயின. இந்த பங்களாவின் சிறப்பைப் பற்றி நான் கேள்விப்பட்டேன். இதில் வசிக்கலாமா என்பதை நிச்சயிக்கும் பொருட்டு இங்கே வந்தேன் - என்று புன்சிரிப்புடன் தெரிவித்தார்.

"மன்னிக்க வேண்டும். நான் தங்களைக் கண்டு அச்சங் கொண்டு, சென்ற அரை நாழிகையாய் இவ்விடத்திலேயே ஒளிந்துகொண்டிருந்தேன். தங்களுடைய சம்பாஷணையினால் இந்த விவரத்தை அறிந்து கொண்டேன். நான் ஒளிந்திருந்து கேட்காமல் போயிருக்க வேண்டும். தாங்கள் என்னைக் கண்டு கொள்வீர்களென்னும் அச்சத்தினால் அப்படிச் செய்யவில்லை; நான் செய்தது எனக்கே வெட்கமாயிருக்கிறது; கோபித்துக் கொள்ள வேண்டாம்" என்று மல்லிகா உண்மையைக் கூறினாள்.

"நாங்கள் வந்தபோது நீ மறைந்ததை நானும் ஆரம்பத்திலேயே அறிந்து கொண்டேன்; நீ மறைந்து கொண்டிருந்தது எனக்கு நன்றாய்த் தெரிந்தது” என்று யானையின் மறைவைக் காட்டினார்.

“தாங்கள் இப்படிச் செய்யலாமா? நான் ஒளிந்து கொண்டிருப்பதை அறிந்தும், தங்களுடைய குடும்ப விஷயங்களைப் பற்றிப் பிறர் காதில் விழும்படி பேசுவது தருமமா?" என்றாள் மல்லிகா.

"இந்த மாளிகைக்கு வந்து, இதை மேன்மைப்படுத்தும் ஸ்திரீயின் மனசுக்கு எவ்வித சஞ்சலமும் உண்டாக்கக் கூடாதென்று நினைத்தே சும்மாவிருந்தேன். நாங்கள் எவ்விதமான ரகஸியத்தைப் பேசிவிட்டோம்? அப்படியொன்றுமில்லையே! ஸகாராம்ராவ் இருக்கும்போது நீ இருப்பதை வெளிப்படுத்தினால் உனக்கு வருத்தமாயிருக்குமென்றே, நான் சந்தேகத்திற்கு இடமில்லாமல் குடும்ப விஷயத்தைப் பற்றிப் பேசினேன்" என்றார் ஜெமீந்தார்.

“ஆகா! அப்படியா என்ன தங்களுடைய தயாள குணம்! முன்பின் அறியாதவளான ஏழையாகிய என் மனம் கோணக் கூடாதென்று தாங்கள் எவ்வளவு முன் யோசனையாகக் காரியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/39&oldid=1229202" இலிருந்து மீள்விக்கப்பட்டது