22
வஸந்தமல்லிகா
செய்தீர்கள்! பற்பல குடிகளைக் காக்கும் கண்ணியமும் ஏழைகளிடத்தில் அன்பும் இருப்பதனாலேதான் தங்களுக்கு இந்தப் பதவி கிடைத்திருக்கிறது! இதுதான் புருஷ சிங்கத்திற்கும் அபலை ஸ்திரீகளுக்குமுள்ள பேதம். நேரமாகிறது; உத்தரவு பெற்றுக் கொள்ளுகிறேன்" என்று நன்றியறிதலோடு மொழிந்துவிட்டு மல்லிகா நடக்க ஆரம்பித்தாள்.
"இன்னொரு வார்த்தை ஒரே நிமிஷம்; எல்லாம் சரிதான்; உன்னுடைய பெயர் இன்னதென்று தெரிவிக்கவில்லையே!” என்று அருகில் நெருங்கி நின்றுகொண்டு வஸந்தராவ் கேட்டார்.
"என் பெயர் மல்லிகா” என்றாள் மடமங்கை.
"அப்படியா எவ்வளவு அருமையான பெயர் அவரவர்களுடைய யோக்கியதைக்குத் தகுந்த பெயர்தான் கிடைக்கிறது" என்றார் ஜெமீந்தார்.
"இப்படிப் பரிகாஸம் செய்யத்தானா இவ்வளவு பிரயாசைப்பட்டு என்னை நிற்க வைத்தது?" என்று மல்லிகா மெதுவாகத் தெரிவிக்க,
"அடடா உன்னைப் பரிகாஸம் செய்ததாகவா நினைத்தாய்! நான் என்னுடைய பகைவனைக்கூடப் பரிகாலம் செய்ய மாட்டேனே! உண்மையில் உன்னுடைய புத்தி விசேஷத்திற்கும் குணாதிசயங்களுக்கும் தகுந்த அழகிய பெயரென்று நினைத்தே அப்படிச் சொன்னேன். அதிருக்கட்டும்; நான் ஒரு விஷயம் கேட்கிறேன். கோபித்துக்கொள்ளாமல் பதில் சொல்லுவாயா?" என்று மெதுவாகக் கேட்டார் ஜெமீந்தார்.
"என்ன விஷயம்?" என்று கலங்கிய மனத்தோடு மல்லிகா வினவினாள்.
"இந்த உலகத்தின் தன்மை எப்படியிருக்கிறதென்றால், ஒருவனுக்கு ஏராளமான பொருளிருப்பதனாலேயே அவன் சுக வாழ்க்கையுடைவனென்று மதிப்பதற்கில்லை. ஒவ்வொருவனுக்கும் ஏதாவது ஒருவிதக் குறையும் விசனமும் இருக்கின்றன. நான் பிறந்தது முதல் இதுவரையில் சந்தோஷமென்பதையே அநுபவித்தவனல்ல. எந்த விஷயத்திலும் சுகமுண்டாகுமென்று