பக்கம்:வசந்த மல்லிகா.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முடவனும் கொம்புத்தேனும்

31


தனது உடம்பையும், கைகால்களையும் அதிக விகாரம் செய்து முறுக்கிக் கொண்டு சற்று மெளனமாய் நின்றாள் கமலா.

"கமலா! என்ன நீ நிரம்பவும் பெரிய மனுஷி ஆய் விட்டாயே! என்னோடு விளையாடியதை எல்லாம் மறந்து விட்டாயா? ஸீதா அப்போது குழந்தையாயிருந்ததனால், அவளுக்கு ஒருவேளை என்னைத் தெரிந்திருக்காது. உனக்கு நன்றாக நினைவிருக்க வேண்டுமே!" என்று அன்புடன் தெரிவித்தார் ஜெமீந்தார். உடனே கமலா, "எனக்கு உங்களுடைய அடையாளம் தெரியாமல் போய்விட வேண்டுமா! அதெப்படிப் போகும்? நீங்கள் புதுப் பணக்காரர் ஆய்விட்டபடியால் உங்களுக்கு ஒருவேளை புத்தி மாறாட்டம் உண்டாகலாம்" என்று பற்கள் யாவற்றையும் காட்டி நகைத்தவண்ணம் கமலா மறுமொழி சொன்னாள். அதுவரையில் அவளை விகாரப்படுத்திய நாணல் கோணல் முதலிய யாவும் இருந்தவிடந் தெரியாமல் பறந்து போயின; அவள் சிரித்த முகத்துடன் அவருக்கருகில் வந்து நெருங்கி நின்றாள்.

"பேஷ்! இப்போதுதான் பழைய கமலா பணம் வந்து விட்டால் சிநேகிதரை மறப்பார்களா? நான் அப்படி மறப்பவனாயிருந்தால், இப்போது தஞ்சையிலிருந்து நேரில் பங்களாவுக்குப் போகாமல் இங்கே போஜனத்துக்கு வருவேனா?” என்றார் ஜெமீந்தார்.

"நீங்கள் எத்தனையோ தடவைகளில் என்னைத் தூக்கி அனைத்து முத்தமிட்டதெல்லாம் இப்போதே நடப்பன போல எனக்கு நினைவுண்டாகிறதே! ஒருநாள் தவறாமல் என்னிடம் வந்து நீங்கள் கொஞ்சாமல் போனதில்லையே! எத்தனை தடவைகளில் நீங்கள் எனக்குப் பழம் வாங்கிக் கொடுத்திருக்கிறீர்கள்!" என்று அடக்க வொண்ணாத சிரிப்பினால் தனது உடம்பு முழுவதும் குலுங்க நகைத்துக் குழந்தையைப் போலப் பேசினாள் கமலா. அவளது மொழிகளைக் கேட்ட ஜெமீந்தாரது தேகம் வெட்கத்தினால் குன்றியது. என்றாலும், அவர் தமது முகத்தோற்றத்தை மாற்றாமல், மேலும் சம்பாஷிக்கலாயினார். செம்மறி ஆட்டைப்போலத் தனது அக்காளுடன் கூடவே தொடர்ந்து வந்த ஸீதா, "பணக்காரனானாலும் பழைய நிலைமையை மறக்கமாட்டேனென்று சொன்னீர்களே! அக்காளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/49&oldid=1229229" இலிருந்து மீள்விக்கப்பட்டது