இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
34
வஸந்தமல்லிகா
சந்தோஷமாக இருந்துவிட்டு நாளைக்கு வரலாம். ஆகையால் மல்லிகாவையும் அழைத்துக் கொண்டு வாருங்கள். அவளும் இவர்களைப் போல விளையாட்டுப் பெண்தானே - மல்லிகா நீ இங்கே என்ன செய்யப்போகிறாய்? இவர்களுடன் நீயும் புறப்படு" என்று அன்பாகத் தெரிவித்தார். அதைக்கேட்ட மற்ற மூவரும் தமது மனத்தில் எழுந்த பொறாமையை அடக்க மாட்டாமல் சிறிது தத்தளித்தனர்; என்றாலும் அவரது சொல்லை மறுத்துப் பேச அஞ்சினவர்களாய் மெளனமாயிருந்தனர். உடனே ஜெமீந்தார் புறப்பட்டார். அவருக்குப் பின்னால் துக்கோஜிராவும் பெண்கள் மூவரும் தொடர்ந்தனர். ஐவரும் பங்களாவை நோக்கிச் சென்றனர்.