உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

வஸந்தமல்லிகா

காட்டானைப் போல் அடக்கவொண்ணா ஆச்சரியமடைந்தவர்களாய்த் தம்முடனிருந்தோரையும் தம்மையும் ஒருங்கே மறந்தவராய்ப் பெருமகிழ்ச்சி காட்டி மேன்மேலும் சென்று கடைசியாகப் படங்களின் மண்டபத்தையடைந்தனர். அதில் வரிசை வரிசையாக மாட்டப்பட்டிருந்த தஞ்சை ராஜாக்களின் படங்களையும் அவர்களது பட்டமகிஷியரின் சித்திரப் படங்களையும் நேத்திராந்நதமாகக் கொண்டு எல்லோரும் திகைப்படைந்தனர். படங்களின் இடையில் ஓர் ஆள் உயரம் எழுப்பி நிறுத்தப்பட்டிருந்த பரசுராம பாவாவின் படத்தைக் கண்ட ஜெமீந்தார் பெரிதும் வியப்படைந்து, "இதை எப்போது எழுதினர்கள்?" என்று கேட்டார்.

ஸகா : இரண்டு வருஷத்துக்குமுன் எழுதுவித்தோம். இதை எழுதினவனுக்கு 500 - ரூபாய் சன்மானம் கொடுத்தோம் என்றான்.

உடனே ஜெமீந்தார், "கமலா ஸீதா படங்களைப் பார்த்தீர்களா?" என்றார்.

"ஆகா! என்ன கண்காட்சி! எங்கள் வீட்டுக்கு ஒர் அடி தூரத்தில் இந்த விநோதக் களஞ்சியமிருப்பதை நாங்கள் இது வரையில் அறிந்துகொள்ளாமல் போய்விட்டோமே என்ற விசனம் உண்டாகிறது" என்று ஆச்சரியத்தினால் வாயைப் பிளந்தவண்ணம் விடையளித்தாள் கமலா.

உடனே ஜெமீந்தார் கமலாவை நோக்கி, "கமலா! மனிதருடைய சுபாவத்தைப் பார்த்தாயா? இப்போது சுகமனுபவிப்பதை விடுத்து, இதுவரையில் அதை அநுபவிக்கவில்லையே யென்று விசனப்பட்டு, உள்ள சுகத்தையும் குறைத்துக்கொள்வது இயல்பாக இருக்கிறதே!" என்று சொல்லிவிட்டு, மல்லிகா எங்கிருக்கிறாளென்று திரும்பிப் பார்த்தார்; அவள் ஒன்றையுங் கவனியாமல் அதிக தூரத்தில் அலட்சியமாக நின்றுகொண்டிருந்ததைக் கண்டார்.

"மல்லிகா! ஏன் அவ்வளவு தூரத்தில் அப்படி நிற்கிறாய்? நடப்பதற்கு அலுப்பாயிருந்தால், மிகுதியிருக்கும் இடங்களை நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம். திரும்பிப் போய்விடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/58&oldid=1229312" இலிருந்து மீள்விக்கப்பட்டது