பக்கம்:வசந்த மல்லிகா.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊசியும் காந்தமும்

41

வோம்" என்று மிகுந்த அன்போடு ஜெமீந்தார் தன்னை நோக்கி மொழிந்ததைக் கேட்ட மல்லிகா திடுக்கிட்டு உடனே புன்சிரிப்பைக் காண்பித்து, "அலுப்பொன்றுமில்லை. இதோ வந்து விட்டேன்" என்று மிருதுவாக விடையளித்து நாணிய வண்ணம் அவர்களுக்கருகில் வந்து நின்றாள்.

"எங்களுக்கில்லாத அலுப்பு இவளுக்கு மாத்திரம் வந்து விட்டதோ இவளுக்குப் பார்க்க மனமில்லாவிட்டால், நின்று விடட்டும். நாம் எல்லா இடத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம்" என்று ஆத்திரமாகக் கூறினாள் ஸீதா.

அதைக் கேட்ட ஜெமீந்தாரது அழகிய முகம் திடீரென்று மாறுபட்டதாயினும் அவர் தமது கோபத்தை வெளியிற் காட்டாமல் மறைத்துக் கொண்டார். அதன் பிறகு அருகிலிருந்த நீர் விளையாட்டு மண்டபத்திற்குப் போயினர். அங்கு ஒரு சிறிய குளம் ஆழமாக வெட்டப்பட்டிருந்தது. சமுத்திரத்திலிருந்து, பூமியின் கீழ் கட்டப்பட்ட கால்வாய் மூலமாக ஜலம் கொண்டு வரப்பட்டு அந்தக் குளத்தில் நிரப்பப்பட்டிருந்தது. அதன் நாற்புறங்களிலும் சலவைக் கல்லினால் படித்துறைகள் கட்டப்பட்டிருந்தன. அதைச் சுற்றிலும் பூத்தொட்டிகளும் சலவைக்கல் நாற்காலிகளும் ஸோபாக்களும் ஏராளமாக நிறைந்திருந்தன. எல்லோருக்கும் முன்னால் நடந்த கமலா ஸீதா துக்கோஜிராவ் ஆகிய மூவரும் அவைகளை அலட்சியமாக மதித்து அண்டை யிலிருந்த கொலு மண்டபத்தின் விசேஷித்த அழகைக்கான ஆவல்கொண்டு விரைந்தோடினர். அதுவரையில் கண்ட விநோதங்களைக் காட்டிலும் பதினாயிரமடங்கு சிறந்த நவீனப் பொருட்களிருந்த அவ்விடத்தின் அழகில் அவர்கள் ஈடுபட்டு வியப்படைந்து தத்தம் கண்ணிற்பட்ட பொருளையே பார்த்த வண்ணம் நெடுநேரமிருந்து, மேற்செல்ல மனமற்றவராய், அதற்கப்பாலிருந்த கிளிமண்டபத்திற்கு அரை மனதோடு நடந்தனர்.

அப்போது தற்செயலாகத் திரும்பிப் பின்புறம் பார்த்த ஜெமீந்தார் மல்லிகாவைக் காணாமல் திடுக்கிட்டவராய், அதிக ஆவல் கொண்டு, திரும்பவும் கொலுமண்டபம் வந்தார். அங்கும் அவள் காணப்படாமையால், அதற்கு முன்னிருந்த நீராடு மண்டபத்திற்கு வந்தார். அங்கு ஒரு சலவைக்கல் மேடையில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/59&oldid=1229313" இலிருந்து மீள்விக்கப்பட்டது