உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊசியும் காந்தமும்

49

அந்தச் சீமாட்டியை அவமதிப்பதுபோல ஆகும்" என்றாள் மல்லிகா.

"மல்லிகா ஏழ்மைத்தனத்துக்கும் அழகுக்கும் என்ன சம்பந்தம்? நீயும் தகுந்த ஆடையாபரணங்களை அணிந்து கொண்டால், அதற்குமேல் ஜாஜ்வல்யமான அழகோடு நீயும் காணப்படுவாய். நீ எவ்வளவு சொன்னாலும் சரி. எனக்கு நீ விலையில்லா மாணிக்கமாகவே காணப்படுகிறாய்” என்றார் ஜெமீந்தார்.

"தங்கள் சித்தம் என் பாக்கியம். நேரமாகிறது. நான் போகிறேன்" என்று வணக்கமாகச் சொல்லிவிட்டு இரண்டோரடி எடுத்து வைத்தாள் மல்லிகா.

"மல்லிகா ஏன் இப்படி அவசரப்படுகிறாய்? தூக்கம் பிடிக்கவில்லையென்று இங்கே வந்தாய். அவர்களுடன் இருப்பது உனக்கு இன்பமற்ற வாழ்வாக இருக்கிறதென்பதை நான் கவனிக்காமலிருக்கவில்லை. ஒவ்வொரு நிமிஷத்திலும் உன் முகத்தில் விசனம் அதிகரித்தே காணப்படுகிறது. உன் மனக்குறையென்ன? அவர்கள் உன்னிடத்தில் நிரம்பவும் வெறுப்பைக் கொண்டிருப்பது நன்றாகத் தெரிகிறது. உன்னை அவர்கள் அதிகமாக வருத்துகிறார்களா? என்னிடத்தில் உண்மையைத் தெரிவிப்பதனால் பாதகமில்லை" என்று பெருகிய அன்புடன் கேட்டார் ஜெமீந்தார்.

"அப்படியொன்றுமில்லை" என்று சொல்ல வாரம்பித்தாள் மல்லிகா. அந்த மொழியில் பாதி நெஞ்சிற்குள்ளேயே மறைந்து விட்டது. அதன்மேல் ஒன்றையும் சொல்ல மாட்டாதவளாய் வெட்கிக் கீழே குனிந்தாள். "இப்படி அவர்கள் நடத்துகிறார்களென்பதை நான் ஆரம்பத்திலிருந்தே கண்டு கொண்டேன். இதுவரையில் அதை எத்தனையோ விஷயங்களில் பரிஷ்காரமாக கவனித்தேன். பவளத்தின் மகிமை பன்றிக்குத் தெரியுமா? உன்னுடைய உண்மையான மேன்மையை அவர்களெங்கே அறியப்போகிறார்கள்?" என்று சொல்லியவண்ணம் மேலும் அவளுக்கருகில் நெருங்கி, "மல்லிகா! நான் உன்னை அன்று கண்டமுதலும் இன்று காலையிலிருந்தும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் உன்னைப் பற்றியே நினைத்து உருகியபடியே இருக்கிறேன். உனக்கு அவர்களுடனிருப்பது எவ்வளவு கடினமாயிருக்குமோ வென்று மனசால் பாவித்துப் பார்த்தேன்.வ.ம.10.-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/67&oldid=1229324" இலிருந்து மீள்விக்கப்பட்டது