உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6-வது அதிகாரம்

கரைபுரண்ட காதல்

ல்லிகா இன்னதென்று விவரிக்க வொண்ணாத ஒருவகை நூதன ஆனந்தத்தையும் அச்சத்தையும் அடைந்தவளாய்த் தனது வாயைத் திறக்கவும் பெரிதும் வெட்கி மெளனியாக நின்றாள். அவரை முதலிற் கண்ட தினத்திலும் அன்று காலை முதலும் அவளது மனதில் அவர்மீது ஒருவித வாத்சல்யமும் மதிப்பும் ஏற்பட்டு அதிகரித்துக்கொண்டே இருந்தன. அதுவரையில் எவரும் அவளிடத்தில் அவ்வளவு ஆழ்ந்த அன்பைக் காட்டியதில் லையாதலாலும், மற்ற எல்லோரும் பணிந்து வணங்கும் நிலைமையிலிருந்த மேன்மை தங்கிய ஜெமீந்தார் தன்னைப் பணிந்து மன்றாடி, தான் அதுவரையில் கேட்டறியாத இன்ப மொழிகளைக் கூறியபடியாலும், மல்லிகா ஆநந்தபரவசமடைந்து வியப்புற்று நின்றாள். அவளது மனத்தின் அது வரையில் திறக்கப்பட்டறியாத ஒரு புதிய சுவர்க்கலோகத்தின் கதவை அவர் உடைத்துத் திறந்து விட்டதைப்போல அவளது மனதில் ஒருவித நூதன இன்பமும் ஸஞ்சலமும் தோன்றின. அவள் வெட்கிக் கீழே குனிந்து நின்றாள்.

திரும்பவும் ஜெமீந்தார், "என் ஆசைக் கண்ணாட்டி! என் பாக்கியமே ஒன்றும் சொல்லாமல் மெளனமாய் நிற்கிறாயே! என்மேல் கோபமா? கண்ணே! கோபிக்காதே! நான் வேறொன்றும் வித்தியாசமான காரியத்தைச் செய்யும்படி உன்னை வற்புறுத்தி உன் மனசுக்கு ஆயாசம் உண்டாக்க நினைக்கவில்லை. உன் மனத்தில் கொஞ்சமும் வருத்த முண்டாக்குமுன் நானே உயிரை விட்டுவிடுகிறேன். என் ஆருயிரே, துன்பத்தால் உன் முகம் கோண நான் ஒரு க்ஷணமும் சகித்திருக்க மாட்டேன். ஒவ்வொரு நொடியும் உன்னை சந்தோஷமாக வைப்பதற்கு முயல்வதையே நான் என்னுடைய சிறந்த பெரும் பேறாக மதிப்பேன். எங்கே? என்னை மணக்க விருப்பமிருக்கிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/69&oldid=1229333" இலிருந்து மீள்விக்கப்பட்டது