பக்கம்:வசந்த மல்லிகா.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

வஸந்தமல்லிகா

தென்னும் அந்த விலைமதிப்பில்லாத மொழியை உன் வாயாற் சொல், பெண்மணி!" என்று மேன்மேலும் ஜெமீந்தார் வருந்தி மிக்க உருக்கமாகப் பேசினார்.

"பிரபுவே! நான் என்ன சொல்லப்போகிறேன்! எனக்கொன்றும் தோன்றவில்லையே! தங்களுடைய உயர்ந்த நிலைமைக்கும் ஏழையாகிய எனக்கும் எவ்வளவு தூரம்! இது எவரும் மனசாலும் நினைக்கக்கூடாத விஷயமாக இருக்கிறதே! பரம தரித்திரம் நிறைந்த ஒரு அநாதை ஸ்திரியை ஒரு பெருத்த ஜெமீந்தார் மணந்து கொண்டாரென்று நாளைக்கு ஜனங்கள் தங்களை இகழ்வாகப் பேசினால், அது தங்களுக்கு எவ்வளவு தலைகுனிவாக இருக்கும்!' என்று மிருதுவாக நாணத்துடன் தெரிவித்தாள் மல்லிகா.

"என் உயிர் நிலையே உலகத்தில் நற்குணமே பெரிதன்றி பணம் பெரிதல்ல. எனக்கு ஏராளமான செல்வமிருக்கிறது. அதை நன்றாக அதுபவிப்பதற்கு நற்குணம் நிறைந்த ஒரு மனையாட்டியே தேவையன்றி, எனக்கு மேலும் பொருள் தேவையில்லை. பிறர் என்ன சொன்னாலும் சரி; அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. மூட ஜனங்களுக்குப் பணமே பிரதானம். உன்னுடைய மேன்மை அவர்களுக்கு எப்படித் தெரியப் போகிறது!" என்றார் ஜெமீந்தார்.

"இதுவரையில் தாங்கள் அழகில் சிறந்த எத்தனையோ மடந்தையரைப் பார்த்திருப்பீர்கள். நானென்ன அவ்வளவு விசேஷம்? என் விஷயத்தில் தங்களுக்குண்டான விருப்பத்தைக் காண எனக்கு நிரம்பவும் ஆச்சரியமாக இருக்கிறதே!” என்று மிகுந்த நாணத்தோடு கூறினாள் மல்லிகா.

"உண்மையே! நான் இதுவரையில் அழகில் சிறந்த மங்கையர் பலரைக் கண்டிருக்கிறேன். அவர்களில் சிலரை மணக்கவேண்டுமென்னும் ஆசையும் உதித்ததுண்டு. ஆனால், அவர்கள் வாயைத் திறந்து ஒருவார்த்தை சொன்னவுடனே என் ஆசையில் பாதி பறந்து போயிற்று. குணத்தழகைக் கண்டவுடனே மிகுதியிருந்த ஆசையும் வெறுப்பாய் மாறியது. ஆனால், உன்னிடத்தில் மாத்திரம், என் ஆசையும் அன்பும் படிப்படியாக அதிகரிக்கின்றன. உன்னுடைய குணத்தைக் காணவும், உன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/70&oldid=1229335" இலிருந்து மீள்விக்கப்பட்டது