54
வஸந்தமல்லிகா
அவரது ஆலிங்கனத்திலிருந்து மெல்ல நழுவி தன்னை விடுவித்துக்கொண்டாள். என்றாலும், அவள் முற்றிலும் புத்தி மாறாட்ட மடைந்தவளாய் ஸ்தம்பித்து ஆநந்தமயமாக நின்றாள்.
"என் பிராண சுந்தரி! பயப்படாதே! என்னுடைய ஆசைப் பெருக்கினால் மெய்ம்மறந்து நான் இவ்விதம் செய்துவிட்டேன். இனி உன்னை ஸஞ்சலப்படுத்தக் கூடிய காரியம் எதையும் செய்யமாட்டேன். என்மேல் கோபங்கொள்ளாதே கண்மணி! ஆகா! என்ன என்னுடைய ஜென்மாந்தர சுகிர்தம்! என்ன பரமானந்தம்! இப்போது நான் அநுபவிக்கும் சுகத்துக்கு ஈடு முண்டோ! என் இன்பவல்லியே! என் மனசின் நிலைமையை நீ எப்படி உணரப் போகிறாய்?" என்றார் ஜெமீந்தார்.
"பிரபுவே! என் மன நிலைமையிலிருந்தே அது இன்னவிதமிருக்கும்மென்பது ஒருவாறு தோன்றுகிறது. ஆகா! ஸ்திரி புருஷரின் மனமென்பது இதுவரையில் காணாத நூதனப் பேரின் பத்தையல்லவா தருகிறது! அந்தச் சொல்லே இப்படி நம்மை இன்பக் கடலில் ஆழ்த்துமானால், மனந்தபின் உண்டாகும் ஆநந்தம் எப்படி இருக்குமோ தெரியவில்லையே? - இருக்கட்டும். நான் இங்கு வந்து அதிக நேரமாய்விட்டது. போகிறேன்" என்றாள் மல்லிகா.
"ஆகா இதற்குள்ளா போகவேண்டும்? மதிப்பில்லா மாணிக்கமே! நாம் இங்கே வந்து ஒரு நிமிஷ நேரங்கூட ஆகவில்லையே! என்ன அவசரம்? இன்றிரவு முழுவதும் நாம் இங்கிருந்தாலும் பிரிய மனம் வருமோ? இனி உன்னைவிட்டு எப்படிப் பிரிவேன்? நீ இப்போது போனால், திரும்பவும் நான் உன்னோடு தனியாக எப்போது பேசப்போகிறேன் காலையில் நீ துக்கோஜியின் வீட்டுக்குப் போய்விடுவாயே! அதன்பிறகு நான் என்ன செய்வேன்?" என்று மனம் நொந்து ஏக்கங்கொண்டு தெரிவித்தார் ஜெமீந்தார்.
மல்லிகா பேசாமல் நின்றாள். மேலும் ஜெமீந்தார், "மல்லிகா உன்னைவிட்டு நான் ஒரு க்ஷணமும் பிரிய மாட்டேன். அதி சீக்கிரத்தில் நம்முடைய விவாகத்தை முடிக்க ஏற்பாடு செய்கிறேன். நீ வழக்கம்போல் இரவில் இங்கு வந்து எனக்குக் காட்சி தந்துவிட்டுப்போக வேண்டுகிறேன். கண்ணே! நாளைக்கு