உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

வஸந்தமல்லிகா

தெரிந்து கொண்டோமென்று நினைத்து நீ சிரித்தாயோ?" என்றாள் ஸீதா.

"ஆம், ஆம்; அப்படித்தான் நினைத்துக்கொண்டு பரிஹாஸம் செய்கிறாள். நடுராத்திரியில் சமுத்திரக்கரையில் நடந்தது முழுதும் தெரியாதென்று நினைக்கிறாயா! எங்களை யாரென்று பார்த்துக் கொண்டாய்! நாங்கள் ஏமாறி நீ செய்ததை அறியாமலிருந்து விடுவோமென்று நினைத்தாயா?" என்றாள் கமலா.

"இப்படித்தானா பெண்பிள்ளைகள் கொழுப்பெடுத்து புருஷருடன் காட்டிலும் மேட்டிலும் அலைந்து திரிகிறது? சே! இவளை இனி நம்முடைய வீட்டில் வைத்துக்கொண்டால் நமக்கு அவமானமும், குலஹானியும் வந்து சேரும். அரைநாழிகைகூட இனி நாம் இவளுடைய முகத்தில் விழிக்கக்கூடாது. ஸீதா வா போகலாம்" என்று சொல்ல இருவரும் திடீரென்று அவ்விடத்தை விட்டுப்போயினர்.

முந்திய நாளிரவில் தனக்கும் ஜெமீந்தாருக்கும் நடந்த சம்பாஷணையையெல்லாம் அவர்கள் அறிந்துகொண்டார்கள் என்பதை உணர்ந்த மல்லிகா நிரம்பவும் வெட்கிக் கீழே குனிந்தவளாய் குழம்பிய மனத்துடன் ஒய்ந்து நின்றாள்; அவர்கள் சேர்ந்துகொண்டு தனக்கு என்ன துன்பம் செய்வார்களோவென்று நினைத்து பெரிதும் அஞ்சினாள். செய்வது இன்னதென்பதை அறியமாட்டாதவளாய் அவள் அசைவற்று நின்றாள்.

கால் நாழிகைக்குப் பிறகு துக்கோஜிராவ் சமையலறைக்குள் வந்து சேர்ந்தான். வந்தவன் கடுகடுத்த முகத்தோடு மல்லிகாவை நோக்கி, "மல்லிகா! நீ இதுவரையில் நல்ல புத்திமதியுடன் நடந்து கொண்டிருந்தாய். இப்போது எங்களுடைய பொல்லாத காலத்தினால், உனக்கு புத்திமாறாட்டம் உண்டாயிருக்கிறது. நீ இப்படிச் செய்வாயென்று நான் இதுவரையில் எதிர்பார்க்கவே இல்லை" என்றான்.

அதைக் கேட்ட மல்லிகா மறுமொழி ஒன்றும் சொல்ல மாட்டாமல் அசைவற்று, சித்திரப் பதுமைபோல நின்றாள். அவன், "நீ ஜெமீந்தாரிடத்தில் வைத்துக்கொண்டிருக்கும் காரியங்களை நாங்கள் நன்றாக அறிந்து கொண்டோம். அவர் எப்படிப்பட்ட மனிதர் என்பது உனக்குக் கொஞ்சமும் தெரியாது. நீங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/76&oldid=1229352" இலிருந்து மீள்விக்கப்பட்டது