உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சொக்குப்பொடி

59

நினைத்துக் கொண்டிருக்கும் விஷயம், என் மனசுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. கலியாணமாக வேண்டிய பெண்கள் எனக்கு இரண்டு பேர் இருக்கிறார்கள். உன்னுடைய துன்மார்க்கத்தினால் என் குடும்பத்துக்கே நீ அவமானமும் பழிப்பும் தேடி வைத்துவிட்டாய். உன்னால் இனி என் வீட்டில் எவரும் தண்ணிர்கூடக் குடிக்க மாட்டார்கள். ஆகையால், இனி ஒரு கணமேனும் இங்கிருக்கக்கூடாது. ஆனால், உன்னை அநாதையாக விட்டுவிட எனக்கு மனமில்லை. அக்கரைச் சீமையாகிய கொழும்பில் என்னுடைய சொந்தக்காரர் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடத்தில் உன்னை இரண்டொரு வருஷகாலம் விட்டு வைக்கத் தீர்மானித்துவிட்டேன். நாளையதினம் காலையில் புறப்படவேண்டும். நீ அதற்குக் தயாராக இருக்கவேண்டும். கொழும்புதான் உன்னுடைய கொழுப்பையடக்க சரியான இடம். உனக்கு வேண்டிய பணத்தை நான் அவர்கள் பேருக்கு அனுப்பி விடுகிறேன். அவர்கள் உன்னை அன்பாகப் பார்த்துக் கொள்வார்கள். நாளைக்குப் போவது நிச்சயம். தயாராக இரு” என்று கீழே குனிந்தவாறே அழுத்தமாகச் சொல்லியவுடன் வெளியிற் போய்விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/77&oldid=1229812" இலிருந்து மீள்விக்கப்பட்டது