62
வஸந்தமல்லிகா
உன் விசனத்தைத் தெரிவி. அதை விலக்கும் பொருட்டு நான் என் உயிரையுங் கொடுக்கத் தடையில்லை" என்று உறுதியாகக் கூறினார்.
"இனிமேல் நாம் ஒருவரையொருவர் சந்திப்பதில்லை. இது தான் கடைசி முறை” என்று விம்மி விம்மி அழுதவண்ணம் மறுமொழி கூறினாள் மல்லிகா.
“என்ன நடந்தது? ஏன் சந்திப்பதில்லை?" என்று ஆத்திரத்தோடு கேட்டார் ஜெமீந்தார்.
"துக்கோஜிராவ் நாளையதினம் காலையில் என்னை கொழும்பு தேசத்துக்கு அனுப்பிவிடப் போகிறார்" என்று திக்கித்திக்கி அழுத வண்ணம் கூறினாள் மல்லிகா.
அதைக் கேட்ட ஜெமீந்தார் வியப்படைந்து, "கொழும்புக்கா? உன்னையா? எதற்காக? இது விந்தையாயிருக்கின்றதே!" என்று கூறினார்.
மல்லிகா : நம்முடைய ரகஸியங்களையெல்லாம் அவர்கள் எப்படியோ அறிந்து கொண்டார்கள். நாம் சிநேகமாயிருப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லையாம்.
வஸ : ஒகோ! அப்படியா! அதற்காக உன்னை அனுப்பி விடப் போகிறார்களா?
மல்லிகா : ஆம்.
வஸ : அங்கே போக உனக்குச் சம்மதந்தானா?
மல்லி : பிரபுவே! இப்படியும் கேட்கலாமா! இதற்கு நான் சம்மதிப்பேனா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியாதா?
வஸ : அப்படியானால் நீ என்னை விட்டுப் பிரிய மாட்டாயா?
மல்லி : என் உயிர்போகும்போதுதான் பிரிவேன்.
வஸ : இது நிச்சயந்தானா?
மல்லி : இன்னமும் சந்தேகமா?
வஸ : மல்லிகா! உன் அன்பையும் பிரியத்தையும் என்ன வென்று சொல்வேன் ஆகா! என்னுடைய பாக்கியமே பாக்கி-