பக்கம்:வசந்த மல்லிகா.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஸுகைாரம்பம்

65

வையும் தேடிக் கொண்டு வந்து விசாரித்து தமது இருப்பிடத்தை அறிந்துகொள்வானென்ற எண்ணமுண்டாயிற்று. அவர் தமது பெயர் மாதவராவ் என்று மாற்றி தெரிவித்தார். அதைக்கேட்டு மணியகாரன் போய்விட்டான்.

உடனே வஸந்தராவ் பெட்டி வண்டியின் கதவைத் திறந்து மல்லிகாவை அழைத்துக்கொண்டு, வண்டியைக் காலை ஆறு மணிக்கு மறுபடியும் கொண்டு வரச் சொல்லிவிட்டு, அந்த வீட்டிற்குள் நுழைந்தார். உட்புறத்தில் நாற்காலிகள் ஸோபாக்கள் முதலிய சகலமாக செளகரியங்களும் ஏற்படுத்தப் பெற்றிருந்தமையால், அந்த வீடு அவர்களுக்கு நிரம்பவும் சுகமாயிருந்தது. மல்லிகாவை ஒரு ஸோபாவில் சயனிக்கச் செய்தபின் வஸந்தராவ் வேறொன்றில் படுத்துக் கொண்டார். அவ்வாறு இருவரும் சிறிது நேரம் நித்திரை செய்ய, பொழுது விடிந்தது.

மணியகாரனால் அனுப்பப்பட்ட வேலைக்காரியான கன்னியம்மாள் என்பவர் அவர்களுக்குத் தேவையான செளகரியங்களைச் செய்தாள். அருகிலிருந்த கடையிலிருந்து சிற்றுண்டிகள் காப்பி முதலியவற்றைத் தருவித்து இருவரும் அருந்தியபின்னர், வஸந்தராவ் வேலைக்காரியை வெளியில் அனுப்பிவிட்டுத் தமது காதலியை நோக்கி, "மல்லிகா! ஏன் உன்னுடைய முகம் ஒருவாறு வாட்டம் அடைந்திருக்கிறது? நடந்தவற்றைப் பற்றி வருத்தப்படாதே. நான் அதிசீக்கிரம் நம்முடைய கலியாணத்துக்கு ஏற்பாடு செய்து விடுகிறேன்" என்று அன்பாகக் கூறினார். அதைக்கேட்ட மல்லிகா இனிமை தவழ்ந்த முகத்தோடு, "நாம் இப்போது எங்கிருக்கிறோம்?" என்று வினவினாள்.

"இது ஒரு வாடகை வீடு. என்னுடைய சொந்த மாளிகைக்கே உன்னை அழைத்துக் கொண்டு போகலாமாவென்று நான் யோசித்தேன். அதில் ஓர் இடைஞ்சலிருக்கிறது; உன்ன்ை ஊரிலிருந்து நானே அழைத்து வந்ததாக இப்போது துக்கோஜிராவ் அறிந்து கொள்வது நிச்சயம். நீ காணாமற் போனதைப் பற்றி அவன் போலீஸில் எழுதி வைப்பான்; உடனே, உன்னைத் தேடிக் கொண்டு என்னுடைய் மாளிகைக்கு வருவான். பார்ப்போருக்கு அது ஏளனமாக முடியும். ஆகையால், நமது கலியான முகூர்த்தம் முடிகிறவரையில் எவருக்கும் தெரியாமல் உன்னை ரகஸியமாக இந்த இடத்தில் வைத்திருக்க உத்தேசித்திருக்கிறேன்.

வ.ம.-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/83&oldid=1230764" இலிருந்து மீள்விக்கப்பட்டது