பக்கம்:வசந்த மல்லிகா.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

வஸந்தமல்லிகா

நான் இப்போது என்னுடைய சமஸ்தான வக்கீலிடம் போய் நான் உன்னை இப்படி அழைத்து வந்து கலியாணம் செய்து கொள்வது சட்டப்படி குற்றமாகுமா என்பதை அறிந்து கொண்டு, புரோகிதரை வரவழைத்து முகூர்த்தநாள் வைத்துக்கொண்டு வருகிறேன். அதுவரையில் நீ இங்கே ஜாக்கிரதையாக இரு; உனக்குத் தேவையானதை வேலைக்காரி செய்வாள். ஆனால் நீ இந்த விஷயத்தில் ஒரு பொய் சொல்ல வேண்டும்” என்றார் ஜெமீந்தார்.

மல்லி : என்ன பொய்? “உன்னைத் தனியாக அழைத்துக்கொண்டு வந்திருப்பதைப் பற்றி இங்கிருப்பவர் சந்தேகிப்பார்களாகையால், நீ என்னுடைய சம்சாரமென்று சொல்லியிருக்கிறேன் உன்னை யார் கேட்ட போதிலும் அப்படியே தெரிவித்துவிடு" என்றார் ஜெமீந்தார்.

"என்னை மீறி என் வாயில் நிஜம் வந்து விடுமே. நான் என்ன செய்வேன்?" என்று சஞ்சலத்தைக் காட்டிய முகத்தோடு மொழிந்தாள் மல்லிகா.

“ஐயோ! உண்மையைச் சொல்லிவிடாதே. இரண்டொரு நாளைக்கே இந்தப் பொய். அதற்குள் நான் எல்லா ஏற்பாடுகளையும் முடித்து விடுகிறேன். நானும் இதுவரையில் பொய்யே சொன்னவனல்ல. ஆனால் உன்னுடைய நன்மையைக் கருதி நான் எதைச் செய்தாலும் அது குற்றமாகாது. ஆயிரம் பொய் சொல்லி, ஒரு கலியாணத்தை முடிக்க வேண்டுமென்று பாமர ஜனங்கள் சொல்வது நம்முடைய விஷயத்தில் பொருத்தமாக இருக்கிறது. இதையன்றி இன்னும் எவ்விதமான காரியம் செய்ய வேண்டியிருந்தாலும், அல்லது நான் என்னுடைய பொருளை எல்லாம் இழப்பதாய் இருந்தாலும், என் உயிர் நிலையாகிய உன் பொருட்டு அவற்றை லட்சியஞ் செய்ய மாட்டேன்” என்று கூறி, அவளைத் தனக்கருகிலிழுத்து ஆசையோடு ஆலிங்கனஞ் செய்து முத்தமிட்டார். “தங்கள் சித்தப்படியே செய்கிறேன்" என்றாள் மல்லிகா.

"என்னுடைய பெயர் மாதவராவ் என்று சொல்லியிருக்கிறேன்; உன்னுடைய பெயரை யாராவது கேட்டால் மல்லிகா என் சொல்ல வேண்டாம். வேறு ஏதாவது ஒரு பெயரைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/84&oldid=1231044" இலிருந்து மீள்விக்கப்பட்டது