பக்கம்:வசந்த மல்லிகா.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஸுகைாரம்பம்

69

புருஷருடைய பெயர் நீங்கள் சொன்னதல்லவே, வேறல்லவா? வேலைக்காரியையழைத்துக் கேட்டால் தெரிவிப்பாள்" என்றாள். அவர் உடனே வேலைக்காரியையழைத்துக் கேட்க, அவரது பெயர் மாதவராவ் என்பது தெரியவந்தது. உடனே அவர் வேலைக்காரியை வெளியில் அனுப்பி விட்டார். தாம் யாரோ வேறொரு மனிதரைத் தமது சிநேகிதரான வஸந்தராவென்று தவறாக நினைத்துக் கொண்டதாக எண்ணி நிரம்பவும் சஞ்சலமடைந்து, "அம்மா! சற்றுமுன் இங்கேயிருந்து போனவர் என்னுடைய சிநேகிதரான வஸந்தராயரைப் போலவே இருந்தார். ஆகையால், அவர்தானென்று நினைத்துக்கொண்டு, இங்கே வந்து இவ்வளவு தூரம் சிரமம் கொடுத்தேன். மனதில் ஆயாசம் வேண்டாம்" என்று சொல்லிவிட்டு எழுந்தார்.

மல்லிகா சிறிது தடுமாற்றமடைந்தவளாய் மெளனமாக நின்றாள். அவர் தனது காதலரது சிநேகிதராதலால், அவரிடம் தான் உண்மையை வெளியிட்டால் அவரும் தங்களுக்கு அநுகூலமாயிருப்பாரேயன்றி தங்களுக்கு யாதொரு தீங்கையும் செய்ய மாட்டாரென்ற நினைத்த மல்லிகா தனது சிரத்தை மெல்ல உயர்த்தி, "நான் சொன்னது நிஜமல்ல; அவர்களுடைய உண்மைப் பெயர் நீங்கள் சொன்னதுதான். இங்கே வந்து இறங்க நேர்ந்ததனால் வேறொரு பெயர் வைத்துக் கொண்டார்கள்" என்று கூறினாள்.

“ஆகா! அப்படியா! எனக்கும் அந்த மாதிரி சந்தேகம் உதித்தது. அதுவே நிஜமாயிற்று. வரவர அவருடைய காரியம் எல்லாம் இப்படி ரகஸியமாகவே இருக்கிறது. கலியாணம் செய்து கொண்டதைக்கூட அவர் எனக்கு இதுவரையில் தெரிவிக்கவில்லையே! என்றார் ஜெமீந்தார். "எங்களுக்கு இன்னும் கலியாணம் ஆகவில்லை; சீக்கிரத்தில் முடியும்" என்றாள் மல்லிகா.

அதைக் கேட்டவுடன் மோகனராவின் முகம் திடீரென்று மாறுபட்டு, அச்சத்தையும் விசனத்தையும் காண்பித்தது. சற்று நேரம் ஏதோ யோசனை செய்து, "கலியாணம் ஆகவில்லை ஆனால் நீ அவருடன் தனியாக இருக்கிறாயோ?” என்று வியப் போடு கூற, அதைக்கேட்ட மல்லிகாவின் மனதும் ஒருவிதமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/87&oldid=1231218" இலிருந்து மீள்விக்கப்பட்டது