உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

வஸந்தமல்லிகா

சஞ்சலமடைந்தது. அவள் முற்றிலும் வெட்கி அவரது முகத்தைப் பார்ப்பதும் கீழே குனிவதுமாயிருந்தாள்.

“என்ன அதிசயம் இது! நீயோ ஒன்றையுமறியாத பதிவிரதா ஸ்திரீயாகக் காணப்படுகிறாய்; உன்னுடைய முகமும் மேன்மையையும் நற்குணத்தையும் காண்பிக்கிறது. அப்படி இருக்க இவ்விதமான அக்கிரமம் நடக்குமா! நீங்கள் இங்கே எப்போது வந்தீர்கள்?" என்றார் ஜெமீந்தார்.

"இன்று விடியற்காலம் சுமார் ஐந்து மணிக்கு வந்தோம். ஏன்? என்ன விசேஷம்?" என்று நடுங்கிய குரலில் மல்லிகா வினவினாள்.

"கொஞ்சம் பொறு; அவசரப்படாதே; நீ சொன்ன சங்கதிகளைக் கேட்க என் மனம் பதறுகிறது. இப்படிப்பட்ட விநோதமும் உண்டாவென்னும் நினைவு என்னை வருத்துகிறது. இருந்தாலும் உள்ளதைச் சொல்லுகிறேன்; கேள்!" என்ற அதிக விசனத்துடன் பேசினார். அவர் தமது மனதை எப்படி வெளிப்படுத்துவதென்பதை அறியாமல் சற்று மயங்கினார்; தாம் பேசாமல் போய்விடலாமாவென்று நினைத்தார். அவளை அந்த விபத்திலிருந்து விடுவிக்காமல் போவது பாவமென்ற எண்ணத்தைக் கொண்டவராய் அவர் மேலே பேசத் தொடங்கினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/88&oldid=1231223" இலிருந்து மீள்விக்கப்பட்டது