9-வது அதிகாரம்
சனிபகவான்
ஆனால் விஷயத்தை எவ்விதம் சொல்ல ஆரம்பிப்பதென்பதையறியாதவராய்க் குழம்பிய மனதோடு மோகனராவ் சற்று பேசாமல் நின்றார். உண்மையைச் சொல்வதும் துன்பமாகத் தோன்றியது. சொல்லாமற் போவதும் சரியல்ல வென்று நினைத்தார். வஸந்தராயரது பாலியச் சேஷ்டைகளைப் பற்றியும், அவரது நடத்தைகளைப் பற்றியும் பலவாறு மோகனராவ் கேள்விப்பட்டிருந்தார். நற்குண நல்லொழுக்கம் நிறைந்த குடும்ப ஸ்திரீயான ஒரு யெளவன மடந்தையைக் கெடுக்கும் எண்ணத்துடன், வஸந்தராவ், அவளை ஏமாற்றி அழைத்து வந்திருக்கிறாரென்பது அவருக்கு உடனே நிச்சயமாயிற்று. அவளுக்கு நேரவிருக்கும் ஆபத்தை எப்படியேனும் தெரிவிப்பதே சரியான காரியமென்று தீர்மானித்துக்கொண்டு அவளை நோக்கி, “நான் சொன்ன சங்கதிகளால் நீ பயந்திருப்பாய். இருந்தாலும் பாதகமில்லை; நான் உனக்கு முக்கியமாய்த் தெரிவிக்க வேண்டிய சங்கதியை இன்னும் சொல்லவில்லை. அதை உன்னிடம் எப்படி வெளிப்படுத்துவது என்று என் மனம் ஸஞ்சலப்படுகிறது" என்றார். அவரது முகக்குறிகால், அவர் கபடமில்லாமல் உண்மையைச் பேசுவதாய்த் தோன்றியது. அதைக் கண்ட மல்லிகாவின் மனதில் ஒருவகையான கலக்கமுண்டாயிற்று. ஆனால், அதைத் தனது புன்சிரிப்பால் மறைத்துக்கொண்டு அவர் என்ன சொல்வாரோவென்று ஆவலுடன் எதிர்பார்த்தாள்.
"வஸந்தராவை உனக்கு நெடுங்காலமாகத் தெரியுமா?" என்றார்.
"இல்லை; இப்போதே சமீப காலத்தில் பழக்கம் ஏற்பட்டது. இரண்டு வாரமாகத்தான் தெரியும்” என்றாள்.
"ஆகா; என்ன ஆச்சரியம்! அவருடைய யோக்கியதா பட்டத்தை கொஞ்சமும் அறியாத நீ, இரண்டு வாரப் பழக்கத்