உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சனி பகவான்

73

லென்பது உனக்குத் தெரியாதுபோலிருக்கிறது. யெளவன ஸ்திரீகளை இவ்விதம் வஞ்சிப்பதில் அவர் கைதேர்ந்தவரல்லவா? அவராவது உன்னைக் கல்யாணம் செய்துகொள்வதாவது ஒரு நாளுமில்லை" என்றார்.

அதைக்கேட்ட மல்லிகாவுக்கு கோபம் மூண்டது. "சரிதான் போமையா! நீ பெரிய மனிதரென்று நினைத்து நான் இதுவரையில் மரியாதையாக பதில் சொன்னேன். அவர்களுடைய குணமும், உண்மையான யோக்கியதையும் எனக்கு நன்றாகத் தெரியும். இங்கே வந்து எனக்கு இந்த உபந்நியாசம் செய்யும்படி உம்மை யார் வருந்தியழைத்தது? உமக்குக் கொஞ்சம் பைத்தியமிருக்கும் என்று நினைக்கிறேன். நல்ல வேளையில் நீர் இவ்விடத்தை விட்டுப்போம். இனி உம்முடைய சொல் ஒன்று கூட என் காதில் படக்கூடாது" என்றாள். அதைக் கேட்ட மோகனராவ் திடுக்கிட்டு மனோ சஞ்சலத்தையடைந்தார். அவளைத் தப்புவிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் தாம் முயன்றது பயன்படாமற் போனதை நினைத்துப் பரிதாபமடைந்தவராய் அவளை நோக்கி சலிப்பாக, "சரி; நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன். பிறகு உன் தலைவிதிப்படி காரியம் நடக்கட்டும். இப்போது நான் சொல்வது உனக்குப் பிடிக்காது; என் சொல்லை அலட்சிம் செய்ததைப் பற்றி அதிசீக்கிரம் நீ தேம்பியழுவாய். உனக்கு எந்தச் சமயத்தில் எவ்விதமான உதவி என்னாலாக வேண்டியிருந்தாலும், அதை நான் செய்ய தயாராக இருக்கிறேன். இப்போது என்னுடைய நல்ல எண்ணம் பலிக்கவில்லை. எல்லாம் அவரவர் விதிப்படிதான் முடியும்? சரி நான் போகிறேன்" என்று மனத்தளர்ச்சியைக் காட்டி மொழிந்தவராய் எழுந்து வாசற்படிக்கு நேரில் வந்தார்; அப்போது வீதியில் ஒரு மனிதர் மற்றொருவருடன் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டார்; உடனே மல்லிகாவின் பக்கமாய்த் திரும்பி, "அம்மா! இந்த விஷயத்தை உனக்கு ருஜூப்படுத்துகிறேன். அதோ வீதியில் கோனூர் மிட்டாதார் நிற்கிறார். அவர் நிரம்பவும் பெரிய மனிதர்; ஒரு நாளும் பொய் சொல்லாதவர். அவரை நான் இப்போது அடுத்த வீட்டுக்குள் அழைத்துக்கொண்டு போய் அவருடைய வாயைக் கிளப்பி விடுகிறேன். நீ ஒன்று செய். பின்புறத்தில் இந்த வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் நடுவில் ஜன்னல் ஒன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/91&oldid=1231234" இலிருந்து மீள்விக்கப்பட்டது