சனி பகவான்
75
கிடைக்கும்? அவர் பூனாவிலிருந்து வந்த பிறகு நான் இன்னும் அவரைப் பார்க்கவே இல்லை. நீங்கள் பார்த்தீர்களா?" என்றார் மிட்டாதார்.
மோகன : இப்போதுதான் பார்த்தேன்.
கோனூர் மி : இந்த ஊரில் இருக்கப் போகிறாரோ, அல்லது பவானியம்மாள்புரத்தில் இருக்கப் போகிறாரோ என்பது தெரியவில்லை.
மோகன : எங்கிருந்தாலும் இனி அவர் கலியாணம் செய்து கொண்டு ஒரே இடத்தில் ஸ்திரமாக இருப்பாரென்று நினைக்கிறேன். இதுவரையில் அவர் தேசசஞ்சாரஞ் செய்தது போதாதா?
கோ.மி : கலியாணத்தில் அவர் அவ்வளவாகப் பிரியப்பட மாட்டாரே. கலியாணம் செய்து கொண்டால் ஒரு மனைவி, இல்லாவிட்டால், ஊரெல்லாம் மனைவியென்று நினைப்பவரல்லவா அவர். அவர் நிரம்ப அழகுடையவராதலால், அவரைக் கண்டு மயங்காத ஸ்திரீயுமில்லை. அவருடைய வலையில் பட்டு மீண்டோருமில்லை.
மோகன : எந்த ஸ்திரீயிடத்திலும் நீடித்த பிரியம் ஏற்படாத மனிதர் கலியாணம் ஏன் செய்து கொள்ளுவார்? இதுவரையில் அவருக்குப் பெண் கொடுப்பதாக எவரும் முன்வரவில்லையா?
கோ.மி : பூனாவில் மூன்று மாசத்துக்கு முன் நடந்த சங்கதி உங்களுக்குத் தெரியாதோ? அங்கே முராரிராவ் என்னும் தனவந்தருக்கு ஒரு யெளவனக் குமரியிருக்கிறாள். அந்த முராரி ராவுக்கும் இவருக்கும் சிநேகமுண்டு. இவர் அங்கே போக்குவரத்தாயிருந்தார். அவரும் இவருடைய குணவொழுக்கங்களைக் கவனித்துப் பார்த்து ஐந்தாறு மாசங்கள் கழித்துத் தமது பெண்ணை இவருக்குக் கலியாணஞ் செய்து கொடுக்க நினைத்திருந்தார். ஸாமித்ராபாயி என்னும் அந்தப் பெண்ணை இவர் எப்படியோ மயக்கி, இரவில் அவளுடைய தகப்பனாருக்குத் தெரியாமல் அவளை அழைத்துக் கொண்டு வேறே ஊருக்குப் போய் ஒரு வாரம் அவளை அங்கே வைத்திருந்து, பிறகு மெதுவாக அவளை அவளுடைய வீட்டுக்குத் திருப்பியனுப்பி விட்டார். அதனால் நிரம்பவும் அவமானமடைந்த முராரிராவ், அவளைக் கலியாணம் செய்து கொள்ளும்படி இவரை எவ்வளவோ வேண்டியும் இவர்