உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

வஸந்தமல்லிகா

வேண்டாமென்று மறுத்து விட்டார். அப்படிச் செய்த யோக்கியரல்லவா இவர்?

மோகன : அப்படியா ஸ்திரீ விஷயத்தில் இவர் அவ்வளவு துன்மார்க்கரா? நிரம்பவும் யோக்கியரென்றல்லவா இதுவரையில் நான் நினைத்திருந்தேன். பார்வையிலிருந்து ஒரு மனிதருடைய குணத்தை அறிய முடியாது போலிருக்கிறதே!

கோ.மி : அவரை நம்பினவள் மீளவே மாட்டாளென்று நான்தான் சுருக்கமாகச் சொல்லிவிட்டேனே. அவரை நம்பின குடும்ப ஸ்திரீ அதோடு நாசமடைவாளேயொழிய தப்புவதில்லை. அவளுடைய குலம், குடும்பம், மானம் முதலிய சகலமும் போய்விடும் - என்றார்.

அந்த சம்பாஷணையைக் கேட்க மல்லிகாவின் மனம் நிரம்பவும் குழம்பியது; தலை சுழலவாரம்பித்தது. அவர்கள் தனது காதலரான வஸந்தராவைத்தான் அவ்விதம் தூக்ஷிக்கிறார்களா, அல்லது வேறு எவரையேனும் குறித்துப் பேசுகின்றார்களாவென்று ஒரு நொடி அவள் மனது சந்தேகித்தது; புத்தியோ மாறாட்டமடைந்து மயங்கியது. அது கனவோ நினைவோவென்று அவள் ஐயமுற்றாள். அவர்கள் தனது உயிர்காதலரது குணவொழுக்கங்களையே உள்ளபடி விவரித்தார்களென்பதும் நிச்சயமாகத் தெரிந்தது. அவளது மனமும் தேகமும் பதறிப் பறந்தன. பலவகையான எண்ணங்களின் பெருக்கைச் சகிக்க மாட்டாதவளாய், "ஐயோ! உம்மை உயிராகவே மதித்தேனே! உலகத்தில் எனக்கு உம்மைத் தவிர யாதொரு புகலுமில்லை யென்று நினைத்து மனப்பால் குடித்தேனே! என்னுடைய எண்ணத்தில் மண்ணைப் போட்டீரோ ஆகா இனி என்ன செய்யப் போகிறேன்!” என்று தனக்குள் நினைத்து நிலைகலங்கி மனக்குழப்பமடைந்து, அந்த ஜன்னலை விட்டு அப்பால் நடந்தாள். அங்கிருந்த கான்பூர் சால்வையை எடுத்துத் தன்னைப் போர்த்தி மூடிக்கொண்டு மெல்ல வீட்டை விட்டு வெளியில் வந்து வீதியிலே எவரேனும் தன்னைக் கவனிக்கிறார்களோ வென்பதை ஆராய்ந்தவளாய் தெருவிலிறங்கி விரைவாக நடந்து மறைந்து போய்விட்டாள்.

அதன் மேலும் கால் நாழிகை வரையில் கோனுரர் மிட்டாதாரும், கலியாணபுரம் ஜெமீந்தாரும் பேசிக்கொண்டிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/94&oldid=1231270" இலிருந்து மீள்விக்கப்பட்டது