பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

வஞ்சிமாநகரம்



சீற்றமடைந்த சினவேங்கையைப்போல் அவன் மட்டுமே தனியாக வேளாவிக்கோ மாளிகை முன்றில் உலாவத் தொடங்கியிருந்தான்.


20. மன்னர் வருகிறார்

நீண்ட நேரம் வேளாவிக்கோ மாளிகை முன்றிலே நடந்து நடந்து கால்கள் ஓய்ந்து எங்காவது சிறிது நேரம் உட்காரலாம் என்று குமரன் நம்பி நினைத்தபோது அவன் முற்றிலும் எதிர்பாராத விதமாக அமைச்சர் அழும்பில்வேளே அங்கு வந்து விட்டார்.

“படைத் தலைவனுக்கு எல்லா மங்கலங்களும் நிறையுமாக ! பெருமன்னரும் பெரும்படைத் தலைவரும், படைகளும் கோநகரில் இல்லாத வேளையில் கொடுங்கோளூர்ப் படைக் கோட்டத்திலுள்ள மிகச் சில வீரர்களைக் கொண்டே கடற் கொள்ளைக்காரர்களின் முற்றுகையை முறியடித்த உன் திறமையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த வெற்றி தந்திரமான வெற்றி, சாமர்த்தியமான வெற்றி” என்று வாய் நிறையப் பாராட்டிக் கொண்டே அவனருகில் வந்த அமைச்சர் தன்னுடைய பாராட்டுக்கள் அவன் முகத்தில் எந்தவிதமான மலர்ச்சியையும் மகிழ்ச்சியையும் உண்டாக்காததைக் கண்டு திகைத்தார்.

ஆயினும் திகைப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “மாமன்னரும், படைத்தலைவர் வில்லவன் கோதையும் படைகளும் குயிலாலுவப் போரில் வெற்றி பெற்றுத் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். நீலமலையில் தற்சமயம் அவர்கள் பாடியிறங்கியிருப்பதாகத் தெரிகிறது. அநேகமாக இன்னும் இரண்டு நாள் பயணத்தில் அவர்கள் இங்கே கோநகருக்கு வந்துவிடக்கூடும்! மாமன்னர் செங்குட்டுவரையும், படைத் தலைவரையும் சேரநாட்டுப் படைவீரர்களையும் வெற்றி