பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

வஞ்சிமாநகரம்



“கடம்பர்களை வென்று துரத்திய பெருமை எனக்கே உரியதா அல்லது அமைச்சர் பெருமானுக்குரியதா என்பதுதான் எனக்குப் புரியவில்லை. ஏனென்றால் இந்த வெற்றியில் நான் ஒரு சாதுரியமான கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளப் பட்டிருக்கிறேனேயல்லாமல் - நம்பிக்கைக்குரிய படைத் தலைவனாகவோ வெற்றிக்குரிய வீரனாகவோ பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை என்று தெரிகிறது. ஒருவனை நம்பிக்கையோடு போற்றுவது வேறு கருவியாகப் பயன்படுத்திக்கொண்டு அதன் மூலம் வெற்றி பெற்றபின் பாராட்டுவது வேறு.”

“இப்படியெல்லாம் நீயாக நினைத்தால் அதற்கு நான் என்ன செய்யமுடியும் குமரா?”

“இல்லை! நிச்சயமாக இதில் கற்பனை எதுவுமே இல்லை. நடந்த நிகழ்ச்சிகளிலிருந்து இதை நான் அனுமானிக்கிறேனேயொழிய கற்பனை எதுவும் செய்யவில்லை.”

“எந்த அளவு கற்பனை? எந்த அளவு அநுமானம் என்பதைப் படைத் தலைவனாகிய நீயே கூறிவிட்டால் நல்லது குமரா”

“அமைச்சர் பெருமானே! கேள்வியிலும் மறுபடி தந்திரம் வேண்டாம். வெளிப்படையாகவே கேளுங்கள்; போதும். கற்பனை எதுவும் இல்லை, அநுமானம் மட்டுமே உண்டு” என்று கூறிய பின்பும், “எந்தளவு கற்பனை? எந்தளவு அநுமானம்? என்று நீங்கள் கேட்பது என்னைப் பொறியில் சிக்க வைக்கச் செய்யும் முயற்சியாக இருக்கிறது என்பதை இந்தக் கணத்தில் நான் உணர்கிறேன்.”

“மிகவும் நல்லது படைத்தலைவா! கற்பனைக்கும் அநுமானத்துக்கும் என்ன வேறுபாடு என்பதையாவது நீ அறிவாய் அல்லவா?”

“அதை அறிவதற்கு நான் தத்துவ ஞானியோ, தர்க்க சாத்திர வல்லுநனோ இல்லை. நான் ஒரு வெறும் படைவீரன். படை