பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

வஞ்சிமாநகரம்



தூண்டினீர்கள். ஏன் அவ்வாறு செய்தீர்கள் என்பதை நான் அறியவேண்டும்” என்றான் குமரன்.

முதலில் மறுமொழி கூறாமல் அவன் முகத்தை நோக்கிப் புன்முறுவல் பூத்தார் அமைச்சர் அழும்பில்வேள், பின்பு மெல்ல அவனை ஒரு கேள்வி கேட்டார்.

“உண்மையிலேயே நான் கூறிய செய்தி உன் ஆவலையும் பரபரப்பையும் தூண்டியது அல்லவா?”

“ஆம்! ஏன் அவ்வாறு தூண்ட முயன்றீர்கள் என்பதுதான் இப்போது என் கேள்வியாக இருக்கிறது?”

“உன் கேள்விக்கு மறுமொழி கூற இயலாத நிலையிலிருக்கிறேன் குமரா! ஆனால் ஒன்று மட்டும் நினைவு வைத்துக்கொள்; ஒரு நாட்டை ஆபத்தான சமயங்களில் காப்பதற்கு வேண்டிய அரசதந்திர முறைகளில் எதை வேண்டுமானாலும் அதன் அமைச்சர் மேற்கொள்ளலாம்.”

“பொய்யைப் போன்ற ஒன்றைக் கூறுவதுகூட அரசதந்திர முறைகளில் அடங்கும் என்று இப்போதுதான் முதன் முதலாகக் கேள்விப்படுகிறேன் அமைச்சரே!”

“எதைப் பொய்யென்று சொல்கிறாய் நீ”

கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியைக் கடம்பர்கள் சிறைப்பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள் என்பது பொய்யென்கிறேன்.”

“பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள் என்பது உண்மையே. கடம்பர்கள்தான் பிடித்துக் கொண்டு போனார்கள் என்று நான் உறுதியாக எதுவும் கூறவில்லையே? கடம்பர்களே அதைச் செய்திருக்கலாம் என்பது என் அநுமானமாக இருந்தது.”

“அநுமானமான ஒரு செய்தியைக் கூறி அரசதந்திர முறைகளில் தேர்ந்த ஒர் அமைச்சர் ஒரு படைத் தலைவனிடம்