பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

வஞ்சிமாநகரம்



வெற்றிப் பெருமிதத்தைப் பங்கிட்டுக்கொள்ள முடியவில்லையே என்ற காரணத்தினால்தான் படைத் தலைவனுக்கு என்மேல் கோபம் வருகிறது. கோபம் தவிர்க்க முடியாததுதான்.

“உன் தந்தை தான் குவித்து வைத்திருக்கும் எல்லா இரத்தினங்களையும் பற்றிக் கவலைப்படலாம். ஆனால் இந்த இரத்தினத்தைப் பற்றி மட்டும் அவர் கவலைப்படவேண்டிய அவசியமில்லை” - என்று படைத்தலைவன் அன்றைக்கு விடைபெறுமுன் அமுதவல்லிக்கு அபயமும் பாதுகாப்பையும் நாட்டு மக்கள் அனைவருக்கும் அளிப்பதற்கு - அமைச்சர் மற்றொரு தந்திரம் செய்தால் அது எப்படித் தவறாகும்?

“........”

இப்போதும் படைத் தலைவன் மறுமொழி எதுவும் கூறமுடியாமல் தயங்கியே நின்றான். மெல்ல மெல்ல அந்த வேளாவிக்கோ மாளிகை பெரிதாகி அங்காய்த்து வாய் விரித்துத் தன்னை விழுங்கிக்கொண்டிருப்பது போல் உணர்ந்தான் அவன். தன்னைப்பற்றி அமைச்சருக்கு இவ்வளவு தூரம் தெரிந்திருக்க முடியுமென்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.

“பேரரசர் இங்கு திரும்பி வெற்றி மங்கலம் கொண்டாடுகிறவரை இங்கே கோநகரத்தில் தங்கி இரு. வெற்றி மங்கல விழாவில் உனக்குப் பரிசளித்துப் பாராட்டப் போகிறேன்” - என்று தன் எதிரே தயங்கித் தலை குனிந்தபடி நின்று கொண்டிருந்த படைத் தலைவனை நோக்கிக் கம்பீரமான குரவில் கட்டளையிட்டார் அமைச்சர் அழும்பில்வேள்.

அப்போது அவரை எதிர்த்தோ மறுத்தோ பேசும் மனத் துணிவு அவனுக்கு இல்லை. அரசதந்திர மாளிகையாகிய அந்த வேளாவிக்கோ மாளிகை இந்த முறையும் அவனை வெற்றி கொண்டு விழுங்கி விட்டது. பேரரசரையும் சந்திப்பதற்கு வாய்ப்பாக இருக்குமென்ற காரணத்தினால் படைத் தலைவன் குமரன் நம்பி கோநகரில் மேலும் சில நாட்கள் தங்கினான்.