பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

வஞ்சிமாநகரம்



வேளாவிக்கோ மாளிகைக்கு இதற்கு முன்பு எப்போதும் தனியாக அவன் வர நேர்ந்ததில்லை. பெரும்படைத்தலைவர் வில்லவன் கோதையோடு சேர்ந்து இரண்டொருமுறை வந்திருக்கிறான். வில்லவன் கோதை பேரரசருடன் குயிலாலுவத்துக்குச் சென்றிருந்ததனால் முதன்முதலாகத் தனியே வேளாவிக்கோமாளிகை என்னும் அரசதந்திரக் கட்டிடத்திற்குள் புகுந்து அமைச்சரை எதிர்கொள்ளும் வாய்ப்புக் குமரனுக்கு ஏற்பட்டிருந்தது. அமைச்சர் அழும்பில்வேள் அரச தந்திரப் பேச்சுக்களிலும் விவாதங்களிலும் வல்லவன் என்பதையும் குமரன் அறிவான். ஆனால் அவரை எண்ணி அவன் ஒரேயடியாக அஞ்சிவிடவில்லை. வேளாவிக்கோ மாளிகையை நெருங்கி அதன் முன்றிலில் புரவியை நிறுத்திவிட்டு உள்ளே போகிறவரை அவன் மனம் பரபரப்பாயிருந்தது. மாளிகை வாசலில் கொடுங்கோளூருக்குத் துதுவந்து திரும்பிய அமைச்சரின் ஒற்றர்கள் குமரனை எதிர்கொண்டார்கள். அவர்கள் தெரிவித்த செய்தி குமரனுக்கு ஓரளவு ஏமாற்றத்தை அளித்தது.

“ஐயா ! இப்போது அகாலமாகிவிட்டது. தங்களை அமைச்சர்பெருமான் நாளை வைகரையில் சந்தித்துப் பேசுவார். அதுவரை இந்த வேளாவிக்கோமாளிகையில் உள்ள விருந்தினர் பகுதியில் தங்கள் விருப்பப்படி களைப்பாறலாம்” என்றார்கள் அமைச்சரின் தூதர்கள். அமைச்சர் தன்னை வரச்சொல்லியிருந்த அவசர உணர்வு குமரனுடைய மனத்தில் தளர்ந்துவிட்டது. ஒற்றர்களான வலியனும் பூழியனுமோ, “ஆந்தைக்கண்ணன் கொடுங்கோளூர்க்கரையை நெருங்கி விட்டானாமே? கணக்கற்ற கொள்ளைக்காரர்களும், மரக்கலங்களும் உடன் வந்திருப்பதாகப் பேசிக் கொள்கிறார்களே? உண்மையா?” என்று கொள்ளைக் காரர் வரவு பற்றி விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களிடமே இதையெல்லாம் பற்றிப் பேசலாமா கூடாதா என்ற தயக்கம் மேலிட்டு குமரன் மெளனமாக இருக்க வேண்டியதாயிற்று. வேளாவிக்கோ மாளிகை நடைமுறை