பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

33



உறங்கியபின்தன் குழுவினருடன் பொன்வானிக் கால்வாய் வழியே படகில் புறப்படவேண்டுமென்பது அவன் திட்டம்.

“அதே கால்வாய் வழியாக நாம் புறப்படுகிற வேளையில் கொள்ளை மரக்கலத்தைச் சேர்ந்தவர்கள் கடலிலிருந்து நகருக்குள் வந்து கொண்டிருந்தால் என்ன செய்வது?”- என்று வினவினான் குமரனின் வீரர் குழுவில் ஒருவன். அதற்குக் குமரன் மறுமொழி கூறினான்.

“இத்தகைய கடற்போரில் வெல்லும் நுணுக்கங்களை நம் பேரரசரும் கடற்பிறக்கோட்டியவர் என்ற சிறப்பு அடைமொழி பெற்றவருமான மாமன்னர் செங்குட்டுவர் நமக்குப் பழக்கியிருக்கிறார் என்றாலும் இரவுவேளையில் நாம் முன்னெச்சரிக்கையாகவே செல்லவேண்டும்.”

“ஆம்; இத்தகைய பலக்குறைவான வேளைகளில் புத்தியைவிட யுக்தியையே அதிகம் பயன்படுத்தவேண்டும்” என்றான் குமரன்.


6. நள்ளிரவில் நிகழ்ந்தது

கொடுங்கோளுர்ப் படைக் கோட்டத்திற்கு அருகிலிருந்த பொன்வானியாற்றுக் கிளைக் கால்வாயிலிருந்து நள்ளிரவு வேளையில் அந்தப் படகு புறப்பட்டது. படகில் கொடுங்கோளுர் குமரன் நம்பியும் அவனுக்கு அந்தரங்கமானவர்களாகிய படைக் கோட்டத்து வீரர்கள் மூவரும் இருந்தனர். அமைச்சர் அழும்பில்வேளின் ஊழியர்களாகிய வலியனும் பூழியனும் படைக்கோட்டத்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது அவர்களுக்குத் தெரியாமலே குமரன் புறப்பட்டிருந்தான். முகத்துவாரத்தை நெருங்குகிறவரை அந்தக் கால்வாயின் இருபுறமும் அடர்ந்த