பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

வஞ்சிமாநகரம்


 சோலைகள் இருந்தன. இயல்பாக இருண்டிருந்த சூழலை இந்தச் சோலைகள் மேலும் இருளாக்கியிருந்தன. எனவே பிறரறியாமற் செல்வதற்கு அந்தச் சூழ்நிலை மிகவும் துணை செய்தது.

நடுக்கடலுக்குள் அவர்களுடைய படகு சென்றபோது அலைகள் அதிகமாயிருந்தன. கடலில் கடம்பர்களும் ஆந்தைக் கண்ணனும் மரக்கலங்களை நிறுத்தியிருந்த இடமோ ஒன்றரை நாழிகைப் பயணத்துக்குரிய தொலைவு இருக்குமென்று தோன்றியது. கடலில் அந்தப் பகுதியினருகே ஒரு சிறு தீவும் அமைந்திருந்தது. படகில் போய்க்கொண்டிருக்கும் போதே என்ன செய்வது என்பது பற்றிக் குமரன் நம்பி திட்டமிடத் தொடங்கினான். அவன் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் சிந்திக்கத் தொடங்குகிறான் என்பதறிந்த நண்பர்கள் மகிழ்ந்தனர்.

‘இந்த அகாலத்தில் ஆந்தைக்கண்ணன் உட்பட எல்லாக் கொள்ளைக்காரர்களும் தத்தம் மரக்கலங்களில் இருப்பார்களா? அல்லது கலங்களிலிருந்து இறங்கித் தீவில் ஒய்வு கொண்டிருப்பார்களா? தீவில் இருப்பார்களானால் நாம் கலங்களில் நுழையலாம். கலங்களில் இருப்பார்களானால் நாம் தீவில் துழையலாம். இவர்கள் சிறைப்பிடித்து வந்த இரத்தின வணிகளின் மகளை எங்கே தங்க வைத்திருக்கிறார்களென்பதும் நமக்குத் தெரியவேண்டும்’ - என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினான் அவன். மெல்ல மெல்ல அவர்கள் படகு கொள்ளை மரக்கலங்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியை நெருங்கியது. தீவில் ஒதுங்கியிருந்த ஒரு பகுதியில் இறங்கிச் சுற்றுச் சூழல்களை அறிந்த பின் மேலே என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வதென்று முடிவு செய்தான் குமரன்.

அவர்களுடைய படகு தீவருகே ஒதுங்கியபோது தீவு அமைதியாயிருந்தது. கரும்பூதங்களைப்போல் அடர்ந்த மரங்கள் தென்பட்டன. நால்வரும் படகைக் கரையருகே இழுத்து அது உட்கடலுக்கு நகர்ந்து விடாமல் மரத்துடன் இறுக்கிக் கயிற்றால் பிணைத்தபின் தீவுக்குள் சென்றனர். தீவில் - கொள்ளைக்