பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

37



மேல்தளத்திற்கு ஏறிச் செல்வதற்கு அதுதான் ஒரே வழி என்பதை அவனால் உய்த்துணர முடிந்தது. ஆனாலும் அப்படிக் கயிற்றேணி வழியாக ஏறிச் செல்வதற்கு முன், மற்ற மரக்கலங்களில் காவலுக்காகத் தளத்தில் நிற்பவர்களுக்குத் தான் கயிற்றேணியில் ஏறும் காட்சி தெரியுமா? அந்தக் காட்சியினால் அவர்கள் கவரப்படுவார்களா என்பதைச் சிந்திக்க வேண்டியிருந்தது.

நல்லவேளையாகக் கயிற்றேணி தொங்கிய பகுதிக்கு நேர் எதிரே பார்வையிலிருந்த மரக்கலத்தின் தளத்தில் தீப்பந்தங்களோடு காவலுக்கு நின்ற வீரர்கள் அப்போதுதான் பந்தங்களை அவித்துவிட்டு உறங்கப் போகத் தொடங்கியிருந்தார்கள். அதைத் தவிர மற்ற மரக்கலங்களுக்குக் காட்சி தெரியாதபடி ஆந்தைக்கண்ணனின் கலமே மறைத்துவிடும் என்று தெரிந்தது.

தான் வந்திருந்த சிறு படகை ஆந்தைக்கண்ணனின் மரக் கலத்தோடு பிணைத்துவிட்டு கயிற்றேணியில் ஏறுவதற்குத் தொடங்கினான் குமரன். காற்றினால் ஒரு தொல்லை ஏற்பட்டது. அவன் மரக்கலத்தோடு பிணைத்த படகு - காற்றில் மரக் கலத்தோடு உறாயத் தொடங்கியதனால் ஏற்பட்ட ஒசை - வேறு மரக்கலங்களுக்கு எட்டி யாராவது அதைக் கவனிக்க நேரிடுமோ என்று தயங்கினான் குமரன்.

கடல் அலைகளின் ஒசையில் அந்த ஓசை பெரிதாகக் கேட்காததினாலோ அல்லது அப்படி ஒரு சப்தம் பல மரக் கலங்கள் அருகருகே நிறுத்தியிருக்கும் கடற் பகுதியில் இயல் பாகவே உண்டாகும் என்று பிறர் எல்லாம் கருதிவிட்டதினாலோ, குமரனுக்கு ஒர் அபாயமும் ஏற்பட அந்த ஓசை ஏதுவாகவில்லை. கயிற்றேணியில் அடிக்கடி ஏறிப் பழக்கமில்லாத காரணத்தால் விரைவாக ஏற முடியவில்லை. அந்த மன நிலையில் இருந்த பதற்றமும், பழக்கமில்லாத கயிற்றேணியில் ஏறும் காரியமும் சேர்ந்து குமரனை விரைவாக இயங்க முடியாமற் செய்தன. செய்தலும், சுழல்தலுமாகிய நிலையில் கயிற்றேணியைத் தாங்கி