பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

வஞ்சிமாநகரம்



மெல்ல மெல்ல மேலேறிய வேளையில் மேலே கப்பவின் மரச் சட்டங்களாகிய தளத்தில் யாரோ நடந்து செல்லும் காலடியோசை கேட்கவே கயிற்றேணியோடு பக்கவாட்டில் ஒண்டிக்கொள்ள வேண்டியதாயிற்று.

இவ்வாறு நீண்ட நேரம் முயன்று மேல்தளத்தை அடைந்தான் குமரன். மேல் தளத்திலிருந்து படிகளில் இறங்கி உள்ளே மரக் கலத்தின் பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் அந்தப் படி இறங்குகிற வழியில் உருவிய வாளுடன் கடம்பன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவன் கண்ணயர்கிறவரை குமரன் நம்பி காத்திருந்தான் ‘படிகளில் இறங்கும்போது யாராவது எதிரே வந்தால் என்ன செய்வது?’ என்பதையெல்லாம் சிந்திக்க நேரமோ வாய்ப்போ இல்லை. மரக்கலத்தின் உட்பக்கத்தில் ஒவ்வொரு தடுப்பாகத் தடுக்கப்பட்டிருந்த அறைகளில் எதிலாவது கொடுங்கோளுர் இரத்தின வணிகரின் மகளும் தன் ஆருயிர்க் காதலியுமாகிய அமுதவல்லி சிறை வைக்கப்பட்டிருப்பாளா என்று கண்டுபிடிப்பதே அவனுடைய முதன்மை நோக்க மாயிருந்தது.

படியிறங்கியதும் முதற் கூடத்தில் பூதம் படுத்து உறங்குவது போல் பெருங்குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்தான் ஆந்தைக்கண்ணன். அந்த மாமிச மலையின் அருகே மதுக்குடங்கள் கவிழ்ந்து கிடந்தன. விகாரமாகக் கால் பரப்பி வீழ்ந்து கிடக்கும் அந்தக் கொள்ளையர் தலைவனைப் பார்ப்பதற்கே பயமாகவும் அரு வருப்பாகவும் இருந்தது. கொள்ளையடிக்கிற பொருள்களையும், பொன், மணி, முத்து முதலியவற்றையும் பாதுகாப்பாக நிறைத்து வைக்கிற பகுதிகளையும் அந்த மரக்கலத்தினுள்ளே சுற்றிப் பார்த்தான் குமரன்நம்பி பலநாள் முற்றுகைக்குரிய உணவுப்பொருள்களும், ஏற்பாடுகளும் அந்த மரக்கலத்தில் இருப்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆயினும் அமுதவல்லியைப் பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை.