பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

வஞ்சிமாநகரம்



இருபது காத துரமும் இதைப் பற்றியே பேச்சாக இருந்தது. கொடுங்கோளுர்க் கோட்டையின் நாற்பக்கத்து வாயில்களையும் கூட அடைத்துவிட்டார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகள் விரைவாக்கப்பட்டன. குணவாயிற் கோட்டத்து அரசு துறந்திருந்த இளைய சேரர் இளங்கோ அடிகள் அரச காரியங்களில் ஆலோசனை கூறும் வழக்கமின்மையால் அவரையும் அணுகிக் கேட்க முடியாமலிருந்தது.

கொடுங்கோளுர்க் கோட்டைப் பாதுகாப்புப் படைத் தலைவன் குமரன் நம்பிக்கு நிலைமையை எப்படி எதிர் கொள்வதென்ற சிந்தனை எழுந்தது. மகோதைக் கரையின் இருபது காததுரத்தில் பேரியாறு பொன்வானி, அயிரை போன்ற பல நதிமுகத்துவாரங்கள் அங்கங்கே இருந்ததனால் ஒவ்வொரு முகத்துவாரத்திற்கும் பாதுகாப்பு அவசியமென்று தோன்றியது. முகத்துவாரங்களின் வழியாகக் கொள்ளைக்காரர்களின் படகுகளோ, கப்பல்களோ உள்ளே புக முடியுமானால் குட்ட நாட்டு நகரங்கள் எல்லாவற்றையுமே சூறையாடிவிட முடியும். பொன்னும் மணியும், முத்தும் பவளமும் நிறைந்த மகோதைக்கரை நகரங்களின் கதி என்ன ஆகுமோ என்ற பீதி எங்கும் பரவத் தொடங்கியிருந்தது.

சேனைத்தலைவனும் பெரும்படைநாயகனும் ஆகிய வில்லவன் கோதை மாமன்னரோடு வடதிசைப் படையெடுப்பிற்குச் சென்றிருந்தான். வஞ்சிமாநகரத்தின் அரண்மனையான கனக மாளிகைக் கோட்டத்தில் அமைச்சர் அழும்பில்வேள் மட்டுமே இருந்தார். செய்தி கனக மாளிகையை எட்டுவதற்கும் அதிகநேரம் ஆகவில்லை. ஆந்தைக் கண்ணன் மகோதைக் கரைநகரங்களைக் கொள்ளையிட இருக்கிறானென்ற செய்தி - மெய்யாயிருந்தாலும் பொய்யாகவே பரப்பப்பட்டிருந்தாலும் அமைச்சர் அழும்பில்வேள் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டியவராய் இருந்தார். கொடுங்கோளுர்க் குமரனை உடனே தலைநகருக்கு அழைத்து