பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

வஞ்சிமாநகரம்



படுவதுபோல் அல்லவா தெரிகிறது - என்று தனக்குத்தானே நினைத்துப் பார்த்தபோது குமரன் நம்பியின் இதழ்களிலே புன்னகை தவழ்ந்து மறையத் தவறவில்லை.

மாளிகையின் கூடத்தில் அமைச்சரைச் சந்திப்பதற்காக அவன் நுழையவேண்டிய கூடத்தில் மட்டும் இரண்டு காவலர்கள் வேலேந்தியபடி நின்றார்கள். அமைச்சரிடம் தன் வரவைத் தெரிவிக்குமாறு அவர்களில் ஒருவனிடம் குமரன் நம்பி வேண்டினான். ஆனால் காவலன் கூறிய மறுமொழி அவனைத் திகைக்க வைப்பதாக இருந்தது.

“அமைச்சர் பெருமான் இப்போது மாளிகையில் இல்லை. இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார். தாங்கள் அதுவரை காத்திருக்க வேண்டுமென்பது கட்டளை ” - இதைக் கேட்டுக் குமரன் நம்பி ஆத்திரமடைந்தாலும் -தன் ஆத்திரத்தை அவனால் வெளிக்காட்டிக்கொள்ள முடியாமலிருந்தது.

ஒவ்வொருமுறையும் அமைச்சர் அழும்பிள்வேள் தன்னைத் தேடி வருகிறவனுக்குத் தாழ்வுமனப்பான்மை உண்டாகும் படியாக இப்படி ஏதாவது செய்து கொண்டிருப்பதை அவன் வெறுத்தான். தேடி வருகிற எதிராளியைச் சந்திக்கும் முன்பே அவனுடைய அகங்காரத்தை வெற்றிக்கொண்டு விடுவதுதான் தேர்ந்த அரசதந்திரக்காரர்களுடைய முறையோ என்று அவனுள் ஒரு சந்தேகம் எழலாயிற்று.

அவன் அமைச்சர் பெருமானைச் சந்திக்கிற ஒவ்வொரு முறையும் கோபத்தோடு வருகிறான். வந்த வேகத்தில் தன்னுடைய அகங்காரத்தை இழக்கிறான். அப்படி அகங்காரத்தை இழந்த மறுகணமே அவரைச் சந்திக்க நேரிடுகிறது. அவரோ அவன் மனத்தில் தாழ்வு மனப்பான்மை கிளறும்படி செய்து விடுகிறார். தாழ்வு மனப்பான்மையோ அவனுடைய அகங்காரத்தை அவனே மறந்துப்போகும்படி செய்துவிடுகிறது. இன்றும் அதே நிலையில்தான் அவன் இருந்தான். அவர் வருகிற வரை