பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டம் கடிநகர் புருடோத்தமன் 81

பொற்கட்டிகளையும் ஒன்றாக ச் சேர்த்து உருக்கி அதனைத் தங்கமாக்குவதற்கு ஓடவைத்தல் போன்று, இறைவன் தன் சங்கற்பத்தினால் பூ, புவ, ஸாவ; , என்ற மூன்றையும் ஓடவைத்துத் தாய்மையாக்கி அதிலிருந்து முதலில் அகாரத்தையும், இரண்டாவதாக உகாரத்தையும், மூன்றாவதாக மகாரத்தையும் தோன்றுமாறு செய்தான். ஆகவே, அ, உ, ம என்ற மூன்றும் கொண்ட ஓம் என்ற .பிரணவம் சகல வேத சாரமாகின்றது’’’

கண்டம் கடிநகரை நோக்கிச் செல்லும் நம்முடைய மனத்தில் இந்த எண்ணங்கள் குமிழியிட்டெழுகின்றன. இன்று தேவப் பிரயாகை என்று வழங்கப்பெறும் இடமே கண்டம் கடிநகராகும். இது பதரிக்குப் போகும் வழியில் கடல் மட்டத்திற்கு மேல் 1700அடி உயரத்தில் இமயமலை யிலுள்ளது; ஹரித்துவாரத்திலிருந்று 70 கி. மீ. தொலை விலுள்ளது. இந்த இடத்தில்தான் விஷ்ணு கங்கையும் (விஷ்ணு படியும்) பாகீரதியும் ஒன்று சேர்ந்து கங்கையாக ஒடத் தொடங்குகின்றது. விஷ்ணு கங்கை என வழங்கும் அழகா நந்தா என்ற நதி அழகாபுரி என்ற இடத்திலும் பாகீரதி கங்கோத்ரியிலும் தொடங்குகின்றன. பூமியின் அடியிலிருந்து சரசுவதி என்ற நதியும், தேவப்பிரயாகை யில் சேர்வதாக ஐதிகம். இதனால் இந்த இடம் திரிவேணி” என்றும் வழங்கப் பெறுகின்றது. இந்த இடத்தில் ஒரு சிற்றுார் உள்ளது; சத்திரங்களும், சிறு சிறு கடைகளும் அமைந்துள்ள இடம் இது. இரண்டு ஆறுகளும் கூடும் இடத்தில்தான் திருமால் திருக்கோயில் உள்ளது. இதில் தென்னாட்டு வைணவ அந்தணர்கள் கைங்கரியம் புரிந்து வருகின்றனர். தேவப்பிரயாகையில் அரங்கநாதருக்கும் ஒரு திருக்கோயில் உண்டு; இதனை ஆதிசங்கரர் நிறுவிய தாகச் சொல்லப்பெறுகின்றது. இந்த ரகுநாத்ஜியின்

2. முமூட்சு-34

33 – 6