பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 வடநாட்டுத் திருப்பதிகள்:

திருக்கோயிலை யொட்டியே பதரிநாதர், காளபைரவர், அதுமான் ஆகியோருக்கும் தனித்தனிக் கோயில்கள் எழுந்துள்ளன.

கண்டம் கடிநகர் எம்பெருமானைப் பெரியாழ்வார் ஒரு திருமொழியில் (11 பாசுரங்கள்) மங்களாசாசனம், செய்துள்ளார். இங்குள்ள எம்பெருமான் புருடோத்தமன்; நீலமேகப் பெருமாள் என்ற திருநாமமும் இவருக்கு. உண்டு. நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுக. மண்டலத்துடன் சேவை சாதிக்கின்றார். தாயார், புண்டரீகவல்லி. இவர்களைக் சேவிக்கின்றோம். பெரியாழ்வார் இவரை,

‘மூன்றெழுத் ததனை மூன்றெழுத் ததனால் மூன்றெழுத் தாக்கி மூன்றெழுத்தை என்றுகொண் டிருப்பார்க்கு இரக்கம்|கன் குடைய

எம்புரு டோத்தமன் இருக்கை: மூன்றடி நிமிர்ந்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுரு ஆனான் கான்தடம் பொழில்சூழ் கங்கையின் கரைமேல்

கண்டம் என்னும் கடிநகமே’ (மூன்று எழுத்து-பிணவம், மூன்று எழுத்து ஆக்கிஅ, உ, ம் ஆக்கி; ஏன்று கொண்டு-தஞ்சமாக நினைத்து அநுசந்தித்து; மூன்று அடி-மூன்று பதம்; கான்-நறு நாற்றம்: தட-பெரிய; பொழில்-சேவை} என்ற பாசுரத்தால் மங்களா சாசனம் செய்கின்றார்.

கண்டம் என்னும் கடிநகர் எங்குள்ளது? நறு நாற்றம் கமழும் பெரிய சோலைகளினால் சூழப்பெற்ற கங்கையின் கரைமேல் உள்ளது. அங்குக் கோயில் கொண்டிருப்பவர் யார்? புருடோத்தமன் என்ற திருநாமம் கொண்ட எம் பெருமான். அவன் தன்மை யாது? அகாரம், உகாரம், மகாரம் ஆகிய மூன்றெழுத்துகளை தன் சங்கற்பத்தினால்

3. பெரியாழ்-திரு.4.7:10