பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களனிந்திருந்த சாந்தும், அவர்கள் தலையில் செருகியிருந்த கற்பகப் பூக்களும் ஒன்று சேர்ந்து வரும் நீரையுடையது(7); வேள்வி நிலத்திலிருந்து யாகப் பசுக்களைக்கட்டுந் தறிகளைத் (யூபஸ்தபங்கள்) திரள்திரளாக அடித்துக் கொண்டு வருகையில் யாகப் புகையையும் உட்கொண்டதால் அந்தப் புகையின் மணமும் கொண்டு இலங்குவது(8); சோலைகளின் வழியே வருவதால் பூக்களின் நறுமணமும் நீரில் கமழ்வது.(10); மந்தரம் முதலிய மலைகள் சலிக்கும் படியாகவும், பூமி பிளவுபட்டு இடிந்து விழும்படியாகவும், இருகரைகளிலுள்ள மரங்கள் வேருடன் சாய்ந்து முறியும் படியாகவும், ஒன்றாலும் கலங்காத கடலும் கலங்கும்படியாகவும் வெள்ளப்பெருக்கு இழியும் தன்மையுடையது (9) இதனால் ‘பொங்கொலி கங்கை’ என்று இதற்குத் திருநாமம் சூட்டுகின்றார் ஆழ்வார்(11).

ஆழ்வார் எம்பெருமானின் பெருமையில் ஈடுபடுவதிலும் நாம் ஆழங்கால் படுவோம். வைணவ தத்துவங்களின் கருவூலமாகத் திகழும் எம்பெருமானின் சிறப்பை மேலே (10) கண்டோம். மேலும், இங்குக் காண்போம். இராமவதாரம், திரிவிக்கிராமவதாரம், பலராமவதாரம், கிருஷணாவதாரம் என்ற அவதார எம்பெருமான்களும், அர்ச்சாவதாரமாக வேறு சில திவ்விய தேசங்களில் எழுந்தருளியுள்ள எம்பெருமான்களும் கண்டம் கடிநகர் புருடோத்தம எம்பெருமானாக இருந்து சேவை சாதிப்பதை ஆழ்வார் திருவுள்ளம் எண்ணிக் களிக்கின்றது. இக்களிப்பை “எம் புருடோத்தமன் இருக்கை...கண்டம் என்னும் கடிநகரே” என்று பாசுரங்கள் தோறும் காணச்செய்கின்றார் ஆழ்வார்.

கண்டம் கடிநகரில் திருக்கோயில் கொண்டு சேவை சாதிக்கும் எம்பெருமான் சூர்ப்பனகையின் மூக்கையும்,-