பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$6 வடநாட்டுத் திருப்பதிகள்

அவளுடைய அண்ணன் இலங்கைவேந்தன் இராவணனின் தலைகளையும் அறுத்தொழித்து அயோத்தி நகர் திரும்பி பதினோராயிரம் ஆண்டு அரசாண்டு தன் புகழ் நிலவச் செய்தவன் (1): மாவலி கையில் நீரேற்று மூவடி மண் பெற்று உலகளக்கத் தொடங்கியபோது சந்திர சூரியர்கள் இதுவென் புகுந்தது இங்கு? அந்தோ? என்றாற்போல அஞ்சி நடுங்கும்படி விம்மி வளர்ந் தோங்கி ஓங்கி உலகளந்தவன். (2); போர் செய்யும் எண்ணத்துடன் எதிர்த்து வந்த அசுரர்களின் தலைகளைப் பாஞ்சசத்தியத்தை திருப்பவளத்தில் வைத்து முழக்கியும். அழல் உமிழ் ஆழி கொண்டெறிந்தும் உருட்டி யருளியவன் (3); அசுரர்களும், அரக்கர்களும் இந்திரன் முதலிய தேவர்களை அமைதியாக இருக்கவொட்டாது அலைத்து அடர்த்து எதிர்த்துப் போர் புரிய வந்த காலத் தில், அவர்கள் பக்கத்தில் துணையாக நின்று அசுரர்கள் மீது நாத்தகம் என்ற வாளை வீசியெறிந்து அவர்களை எமபுரம் கிட்டச் செய்தவன் (4); கலப்பை, உலக்கை, வில், திருவாழி, திருச்சங்கு, மழு, வாள் ஆகியவற்றைப் போர்க் கருவிகளாக உடையவன் (5): இந்திரன் பசிக் கோபத்தால் திருவாய்ப்பாடியில் கல்மாரி பொழிந்து, ஆயர்களையும். ஆநிரைகளையும் அலைத்த பொழுது கோவர்த்தன மலையைத் துளக்கிக் குடையாகப் பிடித்து அவர்தம் இடர்களைப் போக்கியவன் (6): கண்ணனைக் கொல்லும் பொருட்டு, தான் மேற்கொண்ட வில் பெரு விழாவிற்காகக் கம்சன் அழைத்தபோது, அவன் வழியில் நிறுத்தியிருந்த குவலயாபீடம் என்ற யானையையும், அதன்மீது இவர்ந்திருந்த பாகனையும் கொன்றொழித்து, வழியில் மற்போருக்குத் தயாராக நின்ற சானூர்ன் முஷ்டிகன் என்ற மல்லர்களை வானுலகத்திற்கனுப்பி, ஆயுதசாலையிலிருந்த வில்லைப் பிடித்து முறித்தும், உயர்ந்த அரசு கட்டிலின்மீது அமர்ந்திருந்த கம்சன்மீது பாய்ந்து, அவனைக் கொன்றொழித்து அற்புத விளை