பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வடநாட்டுத் திருப்பதிகள்

அமுதினை அவர்கட்கு அளித்தாய்; பயன் கருதாது. நின்னை வணங்கும் அடியேனுக்கு உன் திருவடித்தாமரை களில் இயற்கையாகவே உள்ள இனிமையைத் தருவது எளி தாகும். மத்தால் கடல் கடைந்து வானோர்க்கு அமுது அளித்த அத்தா! எனக்கு உன் அடிப்போதிற் புத்தமுதை வழங்கு என்ற தொடரில் இக்கருத்து தோன்றுகின்றது.

மேலும், ‘அமுதம் வேண்டும் என்று கேட்காத தேவர் கட்கு அதனை உண்டாக்கி அளித்தாய். அதனை விரும்பி வேண்டுகின்ற அடியேனுக்கு, இயற்கையாக நின்னிடத்தி லுள்ள அந்த அமுதினை அளிக்கலாகாதோ? சமயம் வந்த

போது மாத்திரம் கால்கைப் பிடித்து (காக்கைப் பிடித்து?), காரியங் கொண்டு, பிற சமயங்களில் விலகி நிற்பவர்கட்குத் தான் உதவ வேண்டுமா? எப்போதும் நின்னையே அணுகி

நின்று நின்னாலல்லது மற்றை யாவராலும் ஒன்றுங் குறை வேண்டாத அடியேனுக்கு உதவலாகாதோ?

என்பன போன்ற கருத்துகளும் இங்குத் தொனிப்பதைக் கண்டு மகிழ்கின்றோம். புத்தமுது என்பது எத்துணைக் காலம் அநுபவித்தாலும் தெவிட்டுதலில்லாது மேன்மேலும் இன்சுவை பயக்கும் ஆரா அமுது'; ‘'உளங்கனிந்திருக்கும். அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேன்’ போன்றது.

அவன் சந்நிதியில் மீண்டும் ஒரு முறை பெரியாழ்வார் தேனுாறும் திருமொழியை வாய்விட்டு ஒதி பரிபூரண பிரம்மானந்தம் பெற்ற நிலையை அடைகின்றோம். கங்கையாற்றில் நீராடி திருமால் இணையடிகளின் கீழே: நிரந்தர சேவை பண்ணும் பயனைப் பெற்றதாகும் என்று. கூறும் திருமொழிப் பாசுரத்தைச் (11) சிந்தித்த வண்ணம் நம் இருப்பிடத்திற்கு திரும்புகின்றோம்.

SMMMAMMMMAMAAASAASAASAAAS

.ே பெரி. திரு.-4. 3: 9