பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 வடநாட்டுத் திருப்பதிகள்

‘கரைசெய் மாக்கடல் கிடந்தவன்

கனைகழல் அமரர்கள் தொழுது ஏத்த அரைசெய் மேகலை அலர்மகள்

அவளோடும் அமர்ந்தால் இமயத்து வரைசெய் மாக்களிறு இளவெதிர்

வளர்முளை அளைமிகு தேன்தோய்த்துப் பிரச வாரிதன் இளம்பிடிக்கு

அருள்செய்யும் பிரிதிசென்று அடைநெஞ்சே’ [மாக்கடல் - திருப்பாற்கடல்; அரை - இடுப்பு; அலர் மகள் - பெரிய பிராட்டியார்; களிறு - ஆண் யானை, வெதிர் - மூங்கில்; பிரசம் - தேன்; பிடி - பெண்யானை) ‘திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள எம்பெரு. மான் (வியூகநிலை) பெரிய பிராட்டியாரோடு தேவர்கள் சேவித்துத் துதிக்கும்படியாக இமயமலையின்கண் உள்ள திருப்பிரிதியில் எழுத்தருளியுள்ளான். நெஞ்சே நீ அங்குச் செல்க’ என்கின்றார். பாசுரத்தின் பிற்பகுதியில் இமய. மலையைப் பற்றிய செய்தி உள்ளது. இமயமலையில் ஆண் யானையொன்று தன் காதலியாகிய இளம் பெண் யானையை மகிழ்விக்க வேண்டி நெடுக ஓங்கி வளரும் மூங்கில் முளைகளைப் பெயர்த்து எடுத்து மலை முழைஞ்சு களில் மிகுதியாக உள்ள தேனிலே தோய்த்து அதன் வாயில் ஊட்டும். திருமலையில் இத்தகைய காட்சி யொன்றினை பூதத்தாழ்வார் காட்டுவர்.

‘பெருகு மதவேழம்

மாப்பிடிக்கு மூன்நின்று இருகண் இளமூங்கில்

வாங்கி, அருகிருந்த தேன்கலந்து நீட்டும்

திருவேங்கடம்’

4. டிெ 1.2:5 5. இரண்.திருவந்-75